டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மத்தியப் பிரதேசம் இந்தோரில் ‘மாணவர்களின் குரல்’ (“CHHATRON KI GOONJ”) நிகழ்ச்சிக்குப் பிறகு ம.பியில் பாஜக அரசு நடவடிக்கை: –மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 85,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் மோகன் அறிவித்துள்ளார். மேலும், அங்கன்வாடி மற்றும் உதவி அங்கன்வாடி பணியாளர்களுக்கான 2,548 பணியிடங்களும் இணைய வழி விண்ணப்பம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அகிலேஷ்: ஒரு தொகுதிக்கு பா.ஜ.க.வின் வாக்குகளை 27,000 வரை குறைப்போம்; இதனை அடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுடன், மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் கருத்துகளையும் கவலைகளையும் கேட்டறிந்து, அவர்களுக்கு நீதி மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வது குறித்து எடுத்துரைக்க வேண்டும், லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அகிலேஷ் பேட்டி.
தி இந்து:
* எஸ்.அய்.ஆர் (SIR) அறிவிப்புப் பட்டியலில் பிரபலங்கள்: பொருளாதார வல்லுநர் பிபேக் தேப்ராய், தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து, ஆம் ஆத்மி கட்சியின் மணீஷ் சிசோடியா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் காரணமாக அறிவிப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகாரில் வெள்ளத்தால் மக்கள் உயிரிழக்கும் நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டதாக பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்தார் தேஜஸ்வி.
– குடந்தை கருணா
