திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் செப்டம்பர் மூன்றாம் நாள் சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் முடிவின்படி கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வடசென்னை, தென்சென்னை, மேற்கு சென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த கழகக் குடும்பங்களின் கலந்துறவாடல் விருந்து நிகழ்வு, 2026 அக்டோபர் 2ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் காலை 10 மணியளவில் தொடங்கி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பகல் சிறப்பு உணவு, மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் உரை எனச் சிறப்பாக நடைபெற இருப்பதால் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், மகளிர், குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
வருகையை விழையும்,
பா.மணியம்மை, மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்,
க.இறைவி, வீ.கே.ஆர்.பெரியார் செல்வி
மாநில திராவிடர் கழக மகளிர் அணி துணைச் செயலாளர்கள்
