கும்பகோணம், செப். 5- இன்டர் பாலிடெக்னிக் அசோசியேசன் (IPA) சார்பாக தஞ்சாவூர் மண்டலத்துக்கு உட் பட்ட செஸ், கேரம் மற்றும் டேபிள் டென்னிஸ் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான போட்டிகள் 02.09.2026 அன்று கும்பகோணம் அன்னை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்றனர். பெண்கள் பிரிவில் நடைபெற்ற கேரம் மற்றும் செஸ் போட்டியில் பெண்கள் அணி முதல் பரிசையும் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இரண்டாவது பரிசையும் வென்றனர். ஆண்கள் பிரிவில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் மூன்றாவது பரிசையும் மற்றும் கேரம் போட்டியில் நான்காம் பரிசையும் வென்றது. இக்கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் இரா.கோ. கிரிதரபிரசாத் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து ஒருங்கிணைத்தார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை இக்கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி, துணை முதல்வர் முனைவர் க.ரோஜா, அனைத்து துறைத்தலைவர்களும் மற்றும் பேராசிரியர்களும் பாராட்டுகளையும், வாழ்த் துகளையும் தெரிவித்தனர்.
