
தமிழ்நாட்டு அரசியலிலும் சமூகச் சீர்திருத்த வரலாற்றிலும் தந்தை பெரியார் மற்றும் பெருந்தலைவர் காமராசர் ஆகிய இருவருக்கும் இடையேயான உறவு மிகவும் தனித்துவமானது. மாற்று அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், காமராசரின் மக்கள் நலத் திட்டங்களையும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கான கல்விப் பணிகளையும் பெரியார் மனதாரப் பாராட்டினார். காமராசரைத் “பச்சைத் தமிழர்” என்று போற்றி, அவரது ஆட்சிக்குத் தனது முழு ஆதரவையும் வழங்கினார். காமராசருக்கு ஏதேனும் ஒரு பாதிப்பு அல்லது இழிவு ஏற்படும்போது, பெரியார் அதற்கெதிராகத் தமிழ்நாடே அதிரும் வகையில் போராட்டக் குரல் எழுப்பத் தயங்கியதில்லை. அதற்கு ஓர் உதாரணமாக திருச்சி செசன்ஸ் நீதிமன்ற நிகழ்வை கூறலாம்.
காமராசரின் ஆட்சிக் காலத்தில், சென்னை மாகாணத்தின் (இன்றைய தமிழ்நாடு) முதலமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் சாமானிய மக்களுக்கானதாக இருந்தன. அதே வேளையில், ஆதிக்க சக்திகளும் சில பழைய பழைமைவாத அமைப்புகளும் அவரது ஆட்சியையும், அவரது எளிய பின்னணியையும் விமர்சித்து வந்தன.
அத்தகைய ஒரு சூழலில், திருச்சி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது, சாட்சிக் கூண்டிலில் நின்றவர் கருத்த தேகத்தில் 6 உயரத்துடன் சட்டையில்லாமல் சாட்சிக் கூண்டிலில் நின்றதும் நீ என்ன தொழில் செய்கிறாய் என நீதிபதி கேட்க நான் காய்கறி வியாபாரம் செய்கிறேன் என அந்த சாட்சி சொல்ல, மீண்டும் நீ என்ன ஜாதி என நீதிபதி கேட்க (அப்போது ஜாதி கேட்கும் வழக்கம் நீதிமன்றத்தில் இருந்துள்ளது தற்போது விசாரணை நீதிமன்றங்களில் அவ்வாறு எழுதப்பட்டும் வருகிறது அண்மையில் உயர் நீதிமன்றம் அவ்வாறு கேட்கவோ, எழுதவோ தேவையில்லை என்று சொல்லியிருக்கிறது) தான் நாடார் என்று அந்த சாட்சிக்கூண்டிலில் நின்றவர் சொன்னது தான் தாமதம் உடனே மாவட்ட நீதிபதி காமராசரை இழிவு படுத்தும் நோக்கில் , He looks like Kamaraj Nadar, he stands 6 feet tall and is dark skinned like Kamaraj, he doesn’t study anything , illiterate like Kamaraj Nadar functioning as the chief minister of Tamilnadu என்று நகைச்சுவையாக சொல்வதாக நினைத்து உள்நோக்கத்தோடு இழிவு படுத்தியுள்ளார் இதை நீதிமன்றத்தில் அமர்ந்து பார்த்துகொண்டிருந்து சிதம்பரம் பிள்ளை எனும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த வழக்கறிஞர் கோபத்துடன் காங்கிரஸ் அலுவலகம் சென்று அங்கிருந்த காங்கிரஸ் காரர்களிடம் நடந்த நிகழ்வை சொன்னதும் அவர்களோ காமரசருக்கு நடந்த இழிவை பற்றி கிஞ்சித்தும் கவலைகொள்ளாது போய் வேலையை பாருய்யா என சொல்லியிருக்கிறார்கள்- இதனால் மனமுடைந்து தனது வழக்குரைஞர் அலுவலகத்தில் இருந்தபோது அங்கே வந்த ஒருவர் உங்களை அய்யா சந்திக்கவேண்டும் என்று அழைக்கிறார் வாருங்கள் என்று அழைக்க, யார் எந்த அய்யா எனை அழைக்கிறார்கள் என்று கேட்டதும் – அய்யா பெரியார் என்றதும் அதிர்ச்சி கலந்த மகிழ்வில் – இன்ப அதிர்ச்சியோடு அய்யாவை சந்திக்கிறார் – அய்யா அந்த வழக்குரைஞர் சித்ம்பரம் பிள்ளையிடம் நான் நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வை கேள்விப்பட்டேன் – நீங்கள் அதை அப்படியே பேசுவீங்களா என கேட்டதும்- வழ.சிதம்பரம் பிள்ளை எங்கே பேச வேண்டும் என கேட்க இன்று மாலை சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் நடக்கிறது அங்கே பேசுங்கள் என்றதும் தாராளமாக பேசுகிறேன் அய்யா என்று அவர் சொல்ல
அன்று மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடத்த கூட்டத்தில் அய்யா பெரியார் இப்படி தனது உரையை துவங்கி இருக்கிறார் – நம்ம திருச்சி செசன்ஸ் கோர்ட்டுல ஒரு பாப்பாரப்பய செசன்ஸ் ஜட்ஜா இருக்கான் அவன் நம்ம பச்சை தமிழர் காமராசரை ஒரு சாட்சியை விசாரிக்கும் போது அவமானப்படுத்தி இருக்கான் அதை நேரில் பார்த்த வக்கில் சிதம்பரம் பிள்ளை இங்கே இருக்கிறார் அய்யா நீங்க பார்த்ததை பேசுங்க அய்யா என்றதும்
அந்த வக்கில் சிதம்பரம் பிள்ளை நடந்ததை முழுமையாக. நேர்த்தியாக பேசியுள்ளார், அடுத்த நாள் அனைத்து பத்திரிக்கையிலும் முதலமைச்சர் காமரசரை இழிவுபடுத்திய நீதிபதியை கண்டித்து பெரியார் பேச்சு என்று எல்லா பத்திரிக்கையிலும் செய்தி.
இதையடுத்து அந்த நீதிபதி பலரிடம் முறையிட்டு மன்னிப்பு கேட்க அய்யாவை நாட அய்யா பெரியாரோ நீங்கள் அந்த நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர் சிதம்பரம் பிள்ளையிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று அனுப்பிவிட்டார் அய்யா – அதன்பிறகு நீதிபதிக்கு பலமுறை வாய்தா கொடுத்து இறுதியாக மன்னிப்பு வழங்கினார் பெரியாரின் அனுமதியோடு- மன்னிப்பதே மனித இயல்பு என்று அய்யாவி வழிகாட்டுதலில் வழக்குரைஞர் சிதம்பரம் பிள்ளை மன்னிப்பு வழங்கினார் அந்த மாவட்ட நீதிபதிக்கு.
முதலமைச்சர் காமராசரைப் பற்றி மிகவும் இழிவான, தரக்குறைவான மற்றும் தகுதியற் மக்கள் பிரதிநிதியாகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருக்கும் ஒரு தலைவரை, சட்டம் மற்றும் நீதியைக் காக்க வேண்டிய நீதிமன்றத்தின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இழிவுபடுத்திய செய்தி காட்டுத்தீ போல் பரவியது.
பெரியாரின் போர்க்குரலும், கண்டிப்புப் போராட்டமும்!
காமராசரைத் தனது சொந்தத் தம்பியாகவும், தமிழினத்தின் விடிவெள்ளியாகவும் கருதிய தந்தை பெரியார், இந்த அவமதிப்பைக் கண்டு கொதித்தெழுந்தார். தனிநபர் விமர்சனங்களைத் தாண்டி, இது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவனுக்கும் இழைக்கப்பட்ட அநீதி என்று பெரியார் முழங்கினார்.
போராட்ட அறிவிப்பு: தந்தை பெரியார் உடனடியாகத் தனது திராவிடர் கழகத் தொண்டர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் அந்த நீதிபதியைக் கண்டித்துப் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தார்.
அதிகார வர்க்கத்திற்கு எச்சரிக்கை: “மக்களாட்சியின் முதலமைச்சரை இழிவுபடுத்தும் அதிகாரம் எந்த ஒரு நீதிபதிக்கும் கிடையாது” என்பதைப் பெரியார் தனது மேடைப் பேச்சுகள் மற்றும் ‘விடுதலை’ நாளிதழ் வாயிலாகத் தெள்ளத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் உணர்த்தினார்.
மண்டியிட்ட அதிகாரம்
– நீதிபதியின் மன்னிப்பு
– நீதிபதியின் மன்னிப்பு
நீதிமன்ற அவமதிப்பு (Contempt of Court) என்ற சட்ட விதிகளுக்கெல்லாம் அஞ்சாதவராக, சமூக நீதிக்காகப் போராடிய பெரியாரின் இந்த அதிரடிப் போராட்டமும், மக்கள் திரண்டெழுந்த வேகமும் நீதித் துறையையும் அதிகார வர்க்கத்தையும் உலுக்கியது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அந்தத் திருச்சி செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி, நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்கவும், சட்டம்-ஒழுங்குப் பாதிப்புகளைத் தவிர்க்கவும் இறங்கி வந்தாட் காமராசரை இழிவுபடுத்தும் நோக்கில் தான் பேசிய வார்த்தைகளுக்காக, தந்தை பெரியார் மற்றும் தமிழ் மக்களின் போராட்டத்திற்குப் பணிந்து, தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று.
இந்த நிகழ்வின் முக்கியத்துவம் மற்றும் சமூகத் தாக்கம்
இந்த வரலாற்று நிகழ்வு தமிழக வரலாற்றில் மிக முக்கியமான சில உண்மைகளை உணர்த்து கிறது: தலைவர்களுக்கிடையேயான பிணைப்பு, கொள்கை அளவில் காமராசர் காங்கிரஸ் தலைவராகவும், பெரியார் தேர்தல் அரசியலற்ற சமூக இயக்கத் தலைவராகவும் இருந்தாலும், தமிழர்களின் நலன் என்று வரும்போது இரு வரும் ஒருவருக்கொருவர் அரணாக நின்றனர்.
அதிகாரத்தை கேள்வி கேட்கும் துணிச்சல் தந்தை பெரியாருக்கே உண்டு- எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், தவறு செய்தால் அவர்களை மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தி மன்னிப்புக் கேட்க வைக்க முடியும் என்பதைப் பெரியார் நிரூபித்துக் காட்டினார்.
கல்வி மற்றும் சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி: காமராசரின் கல்விப் புரட்சியை முடக்க நினைத்த சக்திகளுக்கு எதிராகப் பெரியார் எடுத்த இந்த அரண், தமிழகத்தில் சமூக நீதி நிலைபெறப் பேருதவியாக இருந்தது.
டெல்லியில் காமராசரின் வீட்டைப் பழமைவாதிகள் தீயிட்டுக் கொளுத்த முயன்ற போது, தமிழ்நாட்டில் அதற்குப் பெரியார் எதிர்வினை ஆற்றியது முதல், நீதிமன்றங்களில் காமராசருக்கு நேர்ந்த இழிவைத் துடைத்தெறிந்தது வரை, பெரியார் காமராசரின் உண்மையான பாதுகாவலனாகத் திகழ்ந்தார். திருச்சி நீதிமன்ற நீதிபதியை மன்னிப்புக் கேட்க வைத்த தந்தை பெரியாரின் இந்தப் போராட்டம், தமிழ்நாட்டின் தன்னாபிமானத்தையும – தந்தை பெரியாரின் போர்க்குனத்தையும் – காமரசரை கண்ணை இமை காப்பதுபோல் – நெஞ்சில் வஞ்சமில்லா அன்பை பெரியார் பொழிந்ததை பார்க்க முடிகிறது- காலத்தான் அழிக்க முடியாத தொண்டு தந்தை பெரியாரின் தொண்டு.
– துரை.அருண்
வழக்குரைஞர்
சென்னை உயர் நீதிமன்றம்
