தந்தை பெரியார் பிறந்த நாளை பெரு விமரிசையாகக் கொண்டாடத் தீர்மானம்! சத்ரபதி சம்பாஜி நகரில் (அகமத்நகர்) ஆலோசனைக் கூட்டம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சத்ரபதி சம்பாஜிநகர், செப்.16- பகுத்தறிவுச் சிந்தனையாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான தந்தை பெரியார் ராமசாமி அவர்களின் பிறந்தநாள் விழாவை  பொதுமக்கள் பங்கேற்புடன் பரந்த அளவில் கொண்டாடி, புரட்சிகரமான அவரது சிந்தனை களை சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்ப்பது என சத்ரபதி சம்பாஜிநகர் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பீம்ராவ் சர்வதே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  மேனாள் நீதிபதி டி.ஆர். ஷெல்கே தந்தை பெரியார் விழாக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்

தந்தை பெரியார்  பிறந்த நாள் விழா  ஆலோசனைக் கூட்டத்தின் தலைவர் சுனில் வாகேகர், துணைத் தலைவர் சஞ்சய் பன்ஸ்வால், வழக்குரைஞர்கள் கபில் பைக்ராவ் மற்றும் விஜய் வான்கேடே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு தலைமையேற்ற வழக்குரைஞர்கள் சுனில் வாகேகர் பேசுகையில்:

“தந்தை பெரியார் பிறநத நாள் வெறும் சம்பிரதாய விழாவாகக் சுருக்கிவிடாமல், மக்கள் விழிப்புணர்வு இயக்கமாகக் கொண்டாட முடிவெடுத் துள்ளோம். மூடநம்பிக்கை, ஜாதி ஓழிப்பு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக தந்தை பெரியார் முன்னெடுத்த கருத்தியல் போராட்டங்களை புதிய தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதே அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகும். இதன் மூலம் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக நீதியை அடித்தட்டு மக்களிடம் பதிய வைக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்,”என்று கூறினார்

தொடர்ந்து, வழக்குரைஞர் விஜய் வான்கேடே  தந்தை பெரியார் வலியுறுத்திய பகுத்தறிவு சிந்தனையின் அவசியத்தை வலியுறுத்தினார். வழக்குரைஞர்கள் தன்யகுமார், மகாதேவ் டாம்ரே மற்றும் ராம்பாவு படேகர் ஆகியோர் தந்தை பெரியாரின் கருத்துகளை மக்கள் மத்தியில் தீவிரமாக விழிப்புணர்வுடன் கொண்டு சேர்ப்பது குறித்தும் விரிவாக உரையாற்றினர்

இக்கூட்டத்தில் பேராசிரியர் குணரத்ன சோனவனே, அக்ரம் கான், அமர்தீப் ஹிவ்ராலே, அவினாஷ் சாவந்த், அசோக் தனகாவ்கர், கீர்த்தி பேட்கர், வித்யா சோனவனே, தீக்ஷா பவார், மனிஷா பள்ளாட், மிலிந்த் தாண்டகே, வசந்தராவ் வகே, சிறீரங் சசானே உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில், பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிய வைப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் வசந்தராவ் வகே, சஞ்சய் பன்ஸ்வால், சிறீரங் சசானே, தீக்ஷா பவார், விஜய் வான்கேடே மற்றும் விஷ்தீப் கரஞ்சீகர்.சர்சீட் பொறுப்பு (செய்தி தொடர்பாளர்): மனிஷா பள்ளாட், அசோக் தனகாவ்கர், அரவிந்த் காம்ப்ளே, அக்ரம் கான், சையத் கலீம் பாக்வான் மற்றும் விஜய் வாஹுல்.செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பரப்புரைக்காக மக்களிடையே கொண்டு சேர்க்க மராட்டிய மொழியில் அச்சடித்த பிரதிகள் இதில் தந்தை பெரியார் யார்? ஜாதியை ஒழிக்க தந்தை பெரியார் மேற்கொண்ட பணிகள், சுயமரியாதை இயக்கம், பெண் விடுதலைப் போராளி, கல்வி ஒன்றே முன்னேறும் வழி,தந்தை பெரியாரும் மராட்டிய சமூக நீதி இயக்கத் தலைவர்களும், இன்று தந்தை பெரியார் ஏன் தேவைப் படுகிறார், தந்தை பெரியாரில் முக்கிய முழக்கங்கள், என்ற தலைப்புகளில் சிறு சிறு குறிப்புகள் அச்சிடப்பட்டு இறுதியில் “படியுங்கள், சிந்தியுங்கள், மற்றவர்களுக்கு கொண்டு சேறுங்கள்” என்ற முழக்கத்தோடு “சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு சமூகநீதி, தந்தை பெரியாரின் பாதையில் செல்வோம்” என்று முடித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *