தந்தை பெரியார் நினைவுத் தூணை மறைத்து வைக்கப்பட்ட பதாகைகள்! நடவடிக்கை எடுக்குமா, தமிழ்நாடு அரசு?

இணையவழி கையெழுத்து இயக்கம்

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி, அன்றைய மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் தமிழ்நாடு அரசின் சார்பில் “பெரியார் நினைவுச் சுடர்” தூண் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தந்தை பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூணை மறைத்து, கடந்த சில மாதங்களாக ஆளுங்கட்சியான த.வெ.க.வின் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல்துறைக்கும், உள்ளூர் நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கும் முறையான பதில் இல்லை.

நாளை மறுநாள் (செப்டம்பர் 17) பிறந்த நாள் நிகழ்வுகள் இருக்கும் நிலையில், இன்னும் அந்தப் பதாகைகளை அகற்றாமல் இருப்பதா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *