தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்: பெரியார் பட ஊர்வலம், குடும்ப விருந்து, கழக நூல் பரப்புரை, கொள்கை விழாவாக கொண்டாடிட பட்டுக்கோட்டை கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

பட்டுக்கோட்டை, செப். 15- 10.9.2026  வியாழன் காலை 10.00 மணியளவில்  பேராவூரணி ST.D.ரெசிடென்சியில் பட்டுக் கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமை வகித்து கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார். மாவட்டத் தலைவர் மல்லிகை வை.சிதம்பரம், மாவட்டச் செயலாளர்  க.தென்னவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, கருத்துரை வழங்கினார்.

நிகழ்வில் பெரியார் பெருந் தொண்டர் கரு. நல்லதம்பி, மாவட்ட துணைச் செயலாளர் சோம.நீலகண்டன், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன்,  மகளிர் அணி தேவி-நீலகண் டன், சேது ஒன்றியம் ஆ. சண் முகவேல், ஒன்றியத் தலைவர் மு. தமிழ்ச்செல்வன், ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். போ.மதியழகன், நன்றி கூறினார்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செப்டம்பர்-3 அன்று  சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக செயற்குழு கூட்ட தீர்மானத்தினை ஏற்று செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது.

உலகத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக செப்டம்பர்-17  அன்று பட்டுக்கோட்டை கழக மாவட்டம் முழுவதும்  கிளைக் கழகம், ஒன்றியம்.நகர பகுதிகளில் கழகக் கொடியேற்றி தந்தை பெரியார் சிலை மற்றும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்வது.  பெரியார் பட ஊர்வலம். தெரு முனைக் கூட்டம் நடத்துதல்.

செப்டம்பர் –  20 பட்டுக் கோட்டையில் கொள்ளும்  சமூக நீதிப் பயணம் “பெரியார் நடை”  (PERIYAR WALK)  நிகழ்வில் அதிக அளவில் தோழர்களை பங்கேற்கச் செய்வது எனவும்.

செப்டம்பர்-27  பட்டுக்கோட் டையில்  பெரியார் கொள்கை குடும்பங்கள் ஒன்று கூடல் (குடும்ப விருந்து)

அக்டோபர்-3  பேராவூரணி கடைவீதியில்  “பெரியார் கேட்கும் கேள்வி” புத்தகம் பரப்புரை செய்தல். மேற்கண்ட நிகழ்வுகளை பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *