பாட்னா, செப்.14- பீகாரில் தொடர் மழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சேதங்களுக்கு மாநில அரசு ஒன்றிய அரசுக் கூடுதல் நிவாரணம் கேட்டு வரும் நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி நேற்று (13.9.2026) பாட்னாவில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஒன்றிய அரசு பீகாரைப் பாரபட்சமாக மாற்றாந்தாய் மனதுடன் நடத்துகிறது. பீகார் வெள்ளத்தை ‘தேசிய பேரிடர்’ என அறிவித்து, ரூ.5,000 கோடி உடனடி நிதிஉதவி வழங்க வேண்டும் என கடந்த 7-ஆம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். அதற்கு இன்று வரை பதில் கிடைக்க வில்லை. இரட்டை என்ஜின் அரசு என கூறிக் கொள்ளும் பீகார் அரசால் ஒன்றிய அரசின் உதவியைப் பெற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
