டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இடதுசாரிக் கட்சிகள் தனித்துப் போட்டி? மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத் தேர்தல்களில் போட்டியிட இடதுசாரிக் கட்சிகள் தயாராகின்றன. தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தல்களில் தனித்துப் போட்டி யிடவும், அய்ந்து முனைப் போட்டியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளன.
* இந்திய புலால் உணவு சுவையானது: ராகுல்: “இந்தியர்களில் 80% பேர் புலால் உணவு உண்பவர்கள்; இந்திய புலால் உணவு மிகவும் சுவையானது” என்று ராகுல் காந்தி கூறினார். பிரிக்ஸ் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட விருந்தில் சைவ உணவு மட்டுமே வழங்கப்பட்டதை விமர்சித்து, இந்தியாவின் உணவுப் பண்பாட்டில் புலால் உணவுக்கும் இடமுண்டு என்றார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாகப்பட்டினத்தில் நெல் சாகுபடிக்கு நெருக்கடி – குறுவை அறுவடை 96% சரிவு: மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதும், காவிரி நீர் பற்றாக்குறையும் காரணமாக குறுவை சாகுபடி 30,000 எக்டேரிலிருந்து 1,720 எக்டேராக குறைந்துள்ளது.
தி இந்து:
* தமிழ்நாட்டில் மின்வெட்டுக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசைக் கண்டனம்: தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சட்டம்–ஒழுங்குப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* சீனா குறித்து பிரதமருக்கு காங்கிரஸ் 4 கேள்விகள்: ஜெய்ராம் ரமேஷ்: லடாக், அருணாச்சலப் பிரதேச எல்லை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட சீனா தொடர்பான 4 கேள்விகளை பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எழுப்பியுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் சந்தித்த மறுநாளே, சீனாவின் “எல்லைப் பகுதி ஆக்கிரமிப்புகள்” குறித்தும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மாற்றுத்திறனாளிகள் கொள்கை – 10 ஆண்டுகளாக மாற்றமின்றி நிலுவை: தற்போதைய மாற்றுத்திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும், புதிய தேசிய மாற்றுத்திறனாளிகள் கொள்கையை அரசு இன்னும் வகுக்கவில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள தேசியக் கொள்கை 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.
– குடந்தை கருணா
