டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 30 ஆண்டுகால பா.ஜ.க. கோட்டையில் பெருஞ் சரிவு; பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி: 19000 வாக்குகள் அதிகம் பெற்று, நிதின் நபின் தொகுதியில் வென்று சாதனை. பாஜக அதிர்ச்சி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 498ஏ சட்டத்திற்கு திருமணம் அவசியம் இல்லை லிவ்-இன் ரிலேஷன் உறவிலும் குடும்ப வன்முறை பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி.
* வினாத்தாள் கசிவு காரணமாக ஜார்கண்டில் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்திற்கு, சிஜேபி ஆதரவு.
* எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிர்ப்பு. பிரதமர் வீடு நோக்கி கெஜ்ரிவால் பேரணி.
* டில்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது வன்முறை; அயோத்தி ராமன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலி; எதிர்க்கட்சிகள் விவாதிக்க ஆர்ப்பாட்டம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34இல் இருந்து 38ஆக அதிகரிக்கும் திருத்த மசோதா மக்களவையில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு இடையே நிறைவேற்றம்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத்தில் 18,404 கூட்டுறவுச் சங்கங்கள் நட்டத்தில்; 10% செயல்படவில்லை; குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் சுமார் 10% செயல்படாமல் அல்லது கலைப்பு நிலையில் உள்ளதாகவும், 18,404 செயல்படும் சங்கங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்.
தி இந்து:
* காவிரி நீர் திறப்பை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு: கபிணி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஜூலை 30 உத்தரவை கருநாடக அமல்படுத்த உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தி டெலிகிராப்:
* ஆர்டிஅய் மனுவால் வந்தது அடுத்த சர்ச்சை: என் சான்றிதழைக் காட்ட நான் தயார் பேரரசர் (பிரதமர் மோடி) தன் டிகிரியைக் காட்டுவாரா? அபிஜித் தீப்கே கேள்வியால் சிக்கித் திணறும் பா.ஜ.க.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஆக.17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2ஆம் கட்டம்; ஜாதி, பெற்றோர் பிறப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் பதிவு. 1931-க்கு பிறகு முதன்முறையாக ஜாதி விவரங்களுடன், பெற்றோரின் பிறந்த தேதி, பிறப்பிடம், விருப்பத்தின் பேரில் ஆதார் மற்றும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எண்களையும் சேகரிக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் 2ஆம் கட்டம் ஆகஸ்ட் 17 முதல் தொடங்குகிறது.
– குடந்தை கருணா
