பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைவான மதிப்பெண் 5 மாணவர்கள் எடுத்த தவறான முடிவு

கிருஷ்ணகிரி, மே 10  கிருஷ் ணகிரி மாவட்டம் குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேலா யுதம். இவருடைய 17 வயது மகன் பாவக்கல் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். தேர்வு முடிவில் ஒரு பாடத்தில் மாணவர் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த மாணவர் அங்குள்ள மாந்தோப்பில் இருந்த மாமரத்தில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். தொழிலாளி. இவருடைய 16 வயது மகள் பிளஸ்-2 தேர்வில் வரலாறு பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த மாணவி அங்குள்ள ஒரு புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளிவயல் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது 16 வயது மகன் தமிழ். ஆங்கிலம், வணிகவியல் பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* வேலூர் காட்பாடி தாலுகா பொன்னையை அடுத்த தெங்கால் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது இளைய மகன் பிளஸ்-2 தேர்வு முடிவில் 600-க்கு 372 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். ஆனால் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாக மனவேதனையோடு பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் திடீரென வீட்டில் உள்ள ஊஞ்சல் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

* திருப்பூர் மாவட்டம் சாணார்பாளையம் முத்துச்சாமி தோட்டத்தை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரது 17 வயது மகள், 600-க்கு 397 மதிப்பெண்கள் கிடைத்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தான் அதிக மதிப்பெண்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால் குறைவான மதிப்பெண்களே கிடைத்து இருப்பதாகவும், இந்த மதிப்பெண்கள் போது மானதாக இல்லை என்று தனது குடும்பத்தினரிடம் மன வேதனையுடன் தெரிவித்தார்.

இந்தநிலையில் மாணவிக்கு ஆறுதல் கூறிய பெற்றோர், தோட் டத்துக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த மாணவி, பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை எண்ணத்தை மாற்ற..

இந்த காலத்து குழந்தைகளுக்கு, பள்ளியிலும் வீட்டிலும், படிப்பு சார்ந்த அழுத்தம் அதிகம் இருக்கிறது. அதனால்தான், அவர்களுக்குள் தேர்வு குறித்த பயமும் அதனால் எழும் மன அழுத்தமும் அதிகமாகிறது. குழந்தைகள் மனதில் மதிப்பெண் குறித்த பாரத்தை ஏற்றிவைப்பது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு.

நமக்கு கல்வி அவசியம் தேவைதான். அதற்காக மதிப் பெண்கள் மட்டுமே வெற்றி கரமான வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை. அதனால், தேர்வு நேரத்தில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் பயத்தைப் போக்கி, நம்பிக்கை அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. தேர்வில் ஒருவேளை தோல்வி அடைந்தாலும், அவர் களுக்கு மன ஆறுதலை கொடுங்கள்.

‘எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் பெற் றோர் இருக்கிறோம்’ என் பதை குழந்தைகளுக்கு தெளிவு படுத்துங்கள். இதுக்கு மேலயும் வாழ்க்கை இருக்கு என்று நம்பிக்கை வார்த்தைகள் தந்து ஆசுவாசப்படுத்துங்கள்.

பிள்ளைளுக்கான பிரச்சினை களை அவர்களுடன் மனம்விட்டு பேசுங்கள். அவர்கள் தெரிவிக்காத போது, அவர்கள் நண்பர்களிடம் பேசி தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றி விடலாம். அவர்களுக்கு தற்கொலை எண்ணமும் தோன்றாது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *