“பா.ஜ.க. பெயரைக் கூட சொல்ல மறுக்கிறார் முதலமைச்சர் விஜய்” திருச்சி ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேச்சு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருச்சி, செப்.13- “நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில் வெற்றியை காண்போம். ராகுல் காந்திதான் பிரதமர் என தவெகவினர் பேசினால் மறுநாளே பாஜக வந்து விடும். திமுகவை விமர்சனம் செய்யும் முதலமைச்சர் விஜய், பாஜக என்கிற பெயரை கூட சொல்ல மறுக்கிறார். அப்படி பாஜகவை விமர்சனம் செய்தால் என்ன நடக்கும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்” என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசினார்.

சட்டப்பேரவையில் திமுக தலைவர்கள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்த கருத்துகளை கண்டித்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன், மேயர் அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா, சட்டமன்ற உறுப் பினர் கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு பேசியது: “திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஊழல் என்றால் நடவடிக்கை எடுங்கள் என்று கூறி, அதற்கு ஆதாரம் கேட்டால், முடிந்துபோன சர்க்கார்யா கமிஷன், அமலாக்கத் துறை வழக்கு, மிசா உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பேசுகிறார். கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சினிமாவில் வசனம் பேசுவது போல அவர் பேசுகிறார். இதேபோல திசை திருப்பும் பணியை தான் முதலமைச்சர் செய்கிறார்.

சட்டப்பேரவையில் நாங்கள் நன்றாக பேசினால் கேமரா எங்கள் பக்கம் திரும்பாது. எதிர்ப்பு தெரிவித்தால் மட்டும் கேமரா எங்கள் பக்கம் திரும்புகிறது. டி.வியில் நேரலையில் பார்ப்பது உண்மையல்ல. நாங்கள் சட்டப்பேரவையில் மோசமாக நடந்து கொள்கிறோம் என்று சித்தரிப்பதற்காகவே டிவியில் தொடர்ச்சியாக எங்களை காட்டுகிறார்கள். நாங்கள் கேட்ட கேள்வி களுக்கு அவர்கள் பதில் அளிப்பதில்லை.

நடைபெற இருக்கின்ற இடைத்தேர் தலில் வெற்றியை காண்போம். காங்கிரஸ் கட்சி நாதியில்லாமல் உள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமர் என தவெகவினரை காங்கிரஸ் கட்சியினர் கூறச் சொல் லட்டும். அப்படி தவெகவினர் பேசினால் மறுநாளே பாஜக வந்து விடும். திமுகவை விமர்சனம் செய்யும் முதலமைச்சர் விஜய், பாஜக என்கிற பெயரை கூட சொல்ல மறுக்கிறார்.

அவர் கெட்டிக்காரர். அப்படி பாஜகவை விமர்சனம் செய்தால் என்ன நடக்கும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அதனால், அவர் பாஜக பெயரை கூட சொல்ல மறுக்கிறார்.

வருகின்ற தேர்தல்களில் திமுக 9 தொகுதிகளிலும் திருச்சியில் மீண்டும் வெற்றி பெறும். இது தானாக வந்த கூட் டம், ஆட்சியை அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் கூட்டம்” என்று அவர் பேசினார்.

கூட்டணிக் கட்சி விவகாரம்: அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ‘‘மிசாவில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசிடம் உள்ளது. அதை அமைச்சர் நிர்மல் குமார் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். இந்தியாவிலேயே தங்கள் கூட்டணியை அரவணைத்து செல்லக்கூடிய தலைவ ராகதான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்.

திமுகவில் இருந்து வெளியேறியவர்கள், அவர்களாக வெளியேறுவதற்கு திமுக காரணமாகாது. திமுக ஒருபோதும் தங்களது கூட்டணி கட்சிகளை விட்டுக் கொடுத்ததில்லை. இனியும் விட்டுக் கொடுக்க மாட்டோம்’’ என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *