தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரியார் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விருந்து, தெருமுனைப் பிரச்சாரம், கழக நூல் பரப்புரை, கொள்கைத் திருவிழாவாக கொண்டாடுவோம் மயிலாடுதுறை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

மயிலாடுதுறை, செப். 12- 8.9.2026 அன்று காலை 10.00 மணிக்கு மயிலாடுதுறை கூரைநாடு  தந்தை பெரியார் படிப்பகத்தில்  மயிலாடுதுறை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், தலைமை வகித்து உரை யாற்றினார். மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கூட்டத் தின் நோக்கங்களை விளக் கிப் பேசினார்.

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன் முடி, மாவட்டக் காப்பாளர் முருகையன், மாவட்டச் செயலாளர் கு.இளமாறன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மாவட்டத் துணைத் தலைவர் ஞான.வள்ளுவன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் நகரத் தலைவர் சீனி முத்து, நகர செயலாளர் காமராஜ், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பாண்டுரங்கன், விவசாய அணி செயலாளர் இளஞ் செழியன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ், குத்தாலம் ஒன்றியம் சபாபதி, இளைஞரணி கா.அருள்தாஸ், பகுத்தறி வாளர் கழக ஒன்றிய செயலாளர் சாமிதுரை ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். நகர துணை செயலாளர் மா.தெ.தும் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

செப்டம்பர் -3 அன்று  சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக செயற்குழு கூட்ட தீர்மானத்தினை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

உலகத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக செப்டம்பர்-17  அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில். கிளைக் கழகம், ஒன்றியம், நகரம் முழுவதும் கழகக் கொடியேற்றி தந்தை பெரியார் சிலை மற்றும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது – அன்று மாலை மயிலாடுதுறையில் பெரியார் பட ஊர்வலம் தெருமுனை கூட்டம் நடத்துதல்.

செப்டம்பர் 20 மயிலாடுதுறையில் சமூக நீதி, பயணம் “பெரியார் நடை”  (PERIYAR WALK) நடத்துவது. செப்டம்பர் 26 மயிலாடுதுறையில் பெரியார் கொள்கைக் குடும்பங்கள் ஒன்று கூடல் (குடும்ப விருந்து)

அக்டோபர்-4 சீர்காழி யில்  புத்தகம் பரப்புரை. மேற்கண்ட நிகழ்வுகளை மயிலாடுதுறை மாவட்டத் தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *