அமெரிக்கவாழ் இந்தியர்களின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் இந்துத்துவ அமைப்புகள்

இணையவழி கையெழுத்து இயக்கம்

வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்காக அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தீபாவளி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்துப் பண்டிகைகள் அந்நாடுகளிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. தொடக்க காலத்தில் உள்ளூர் மக்களுடன் இணைந்து ஒரு கலாச்சாரப் பகிர்வாக அமைந்த இத்தகைய நிகழ்வுகள், அண்மைய ஆண்டுகளில் பல்வேறு சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விவாதங்களை எழுப்பியுள்ளன.

சுற்றுச்சூழல் பாதிப்புகளும், நீர்நிலைகள் மாசுபாடும்!

இந்தியாவில் மகாராட்டிரா மாநில மக்கள் விநாயகர் சதுர்த்தியின் போது பெரிய அளவிலான சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம் கடந்த 20 ஆண்டுகளாக ஹிந்துத்துவ அமைப்புகள் சில மதவாதத்தைப் பரப்பவேண்டும் என்பதற்காகவே நிதிகொடுத்து குறிப்பாக தென் இந்தியாவின் பெங்களூரு, அய்தராபாத், சென்னை போன்ற நகரங்களில் இதே பாணியில் மண்டபங்கள் அமைப்பது, பெரிய சிலைகளுடன் ஊர்வலம் செல்வது மற்றும் பூஜைப் பொருட்களை நீர்நிலைகளில் கொட்டுவது குறிப்பாக மதவாத முழக்கங்களைச் செய்வது போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த சாயங்களால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் பூஜை உபரிப் பொருட்கள் அந்நாட்டிலுள்ள ஏரிகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் வீசப்படுவதால், நீர்மாசுபாடு ஏற்படுவதாக உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் பல நாள்களாக கவலை தெரிவித்து வருகின்றனர்.

மேலைநாடுகளின் நகரங்களில் பொது அமைதியையும், பிறரின் தனிநபர் சுதந்திரத்தையும் மதிப்பது மிக முக்கியமான சமூக விதியாகக் கருதப்படுகிறது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக மேலைநாடுகளிலும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள நகரங்களில் வாழும் ஹிந்துக்களை அங்குள்ள ஹிந்துத்துவ அமைப்பினர் விழாக்களை பொது இடங்களில் கொண்டாட நெருக்கடி கொடுக்கின்றனர். ஊர்வலங்களின் போது அதிக சத்தத்துடன் இசைக்கருவிகளை முழங்குவது, உரத்த குரலில் முழக்கங்களை எழுப்புவது போன்ற செயல்கள் மற்ற சமூகத்தினருக்கு இன்னல்களை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

வரலாற்று ரீதியாக மகாராட்டிரா மாநிலத்தில் மட்டுமே மிகவும் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழா,  ஹிந்துக்கள் என்ற போர்வையில் மேலை நாடுகளில் குறிப்பாக அனைத்து மாநில மக்களையும் கொண்டாட வற்புறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, பொதுப் போக்குவரத்து முடங்குவது மற்றும் ஒலிமாசு ஏற்படுவது போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன.

வெளிநாடுகளில் உள்ள சில அமைப்புகள் இதுபோன்ற விழாக்களை ஒருங்கிணைக்கும் போது, அங்கிருக்கும் அனைத்து இந்தியர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்ற மறைமுக அழுத்தத்தைக் கொடுப்பதாகப் புகார்கள் உள்ளன. விழாக்களில் பங்கேற்காதவர்கள் அல்லது மாற்றுக்கருத்து கொண்டவர்கள் மீது தேசியவாதம் சார்ந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால், பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் விருப்பமின்றியே இதில் பங்கேற்கும் சூழல் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பொதுமக்களின் தொடர் புகார்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வலியுறுத்தல் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட சில மேலைநாடுகளின் உள்ளூர் நிர்வாகங்கள் பொதுவெளியில் சிலைகளைக் கரைப்பதற்கும், அனுமதி மீறிய ஊர்வலங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன. “கொண்டாட்டங்களை வீடுகளுக்குள்ளேயே அல்லது தனியாருக்குச் சொந்தமான இடங்களில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்” என்ற கோரிக்கை அந்நாட்டு மக்களிடையே வலுத்து வருகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் மற்றும் வெறுப்புணர்வுகள் அவ்வப்போது வெளிப்பட்டு வரும் சூழலில், பொதுத்தளங்களில் சுற்றுச்சூழல் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற செயல்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீதான அதிருப்தியை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

கலாச்சார அடையாளங்களையும் வழிபாட்டு உரிமைகளையும் பேணிப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வாழும் நாட்டின் சட்ட திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிற சமூகத்தினரின் நிம்மதியான வாழ்க்கையை மதிப்பதும் முக்கியமாகும். மேலைநாடுகளில் வாழும் இந்தியச் சமூகம் இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து, பொது அமைதிக்கும் சூழலியலுக்கும் பாதிப்பில்லாத வகையில் தங்களது பண்டிகைகளை அமைதியான முறையில் கொண்டாடுவதே அவர்களுக்கான பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்யும். ஆனால் உலகெங்கும் உள்ள ஹிந்துத்துவ அமைப்புகள் வேண்டுமென்றே  அங்கு உள்ள இந்தியர்களை ஈடுபட வைக்கின்றனர் இதனால் சாதாரன வேலைக்கும் வணிகத்திற்கும் சென்ற வட இந்தியர்களோடு சேர்ந்து நல்ல கல்வி கற்றும் பெரும் பதவியில் இருக்கும் தென் இந்தியர்களும் அவப்பெயரைச் சுமக்கவேண்டி உள்ளது.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களை வீட்டிலேயே கொண்டாடுங்கள் அமெரிக்கா ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டுச்சொத்து கிடையாது என்று அங்குள்ள மக்கள் எச்சரிக்கும் அளவிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *