அசோதை – இரா.அரங்கராசன் இல்லம் அறிமுகம் விழா!
ஒரேயொரு மனிதர் இவ்வளவு சாதனைகளைச் செய்து இருக்கின்றார்!
அதற்கு ஒரே காரணம் பெரியார்! பெரியார்! பெரியார்!
பெரம்பலூர். செப்.10- நினைவில் வாழும் கா.லெட் சுமணன் – இராமாயி அம்மாள் இவர்களின் மகள், மருமகன் அசோதை – இரா.அரங்கராசன் இல்லத்தை அறிமுகம் செய்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அதில், “தந்தை பெரியார் என்ற ஒரேயொரு மனிதர் இந்த சமுதாயத்தையே மாற்றி அமைத்தது போல், அரங்கராசன் என்ற ஒரே யொரு மனிதர், இந்த கிராமத்தையே மாற்றி இருக் கிறார்” என்று பாராட்டி உரையாற்றினார்.
அசோதை – இரா.அரங்க ராசன் இல்லத்தினர் சார்பில், 9.9.2026 அன்று காலை 11 மணிக்கு, பெரம்பலூர் மாவட்டம் வசிஷ்ட புரம் ஊரில் அவர்களது இல்லத்தை அறிமுகம் செய்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்கள் வாழ்த்தி உரையாற்றினார்.
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.தங்கராசு தலைமை ஏற்க, இ.விக்டோரியா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பெரம் பலூர் மாவட்டப் பொது குழு உறுப்பினர் இரா.அரங்கராசன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரை யாற்றினார். மாநில ஒருங்கி ணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமாரர், உரத்த நாடு இரா.குணசேகரன், திட்டக்குடி உரிமையியல் நீதிமன்றம் அரசு வழக்கு ரைஞர் இந்திரா கருணாநிதி, அரியலூர் மாவட்டத் தலை வர் விடுதலை நீலமேகம், பெரம்பலூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் பெ.நடராஜன், பெரம்பலூர் மாவட்டக் காப்பாளர் ந.ஆறுமுகம், திட்டக்குடி நகரத் தலைவர் அறிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முன்னதாக, கழகத் தலைவர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கல்வெட்டைத் திறந்து வைத்து சிறப்பித்தார். அத்துடன் கடவுள் மறுப்புக் கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் மு.விஜயேந் திரன் மந்திரமா? தந்தி ரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்திக் காட் டினார். கழக மகளிரணித் தலைவர் கு.குண கோமதி குத்துவிளக்கை அணைத்து, மின் விளக்கை ஒளிரச் செய் தார். நிறைவாக இல்லத்தை அறிமுகம் செய்து வைத்த, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

அவர் தமதுரையில், அரங்க ராசனின் இல் லத்தினரின் பெயர் களை வாசித்தார். வாலண் டீனா, இங்கர்சால், ரஷ்யா, எலிசபெத் என்று தொடர்ந்தது இப் பெயர்கள். வாசித்து விட்டு, “அரங்கராசன் உலகத்தையே வீட்டுக்குள் வைத்திருக் கிறார்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே தொடங்கினார். தொடர்ந்து அவர், “நான் இங்கு வர வேண்டும் என்று 36 ஆண்டுகளாக காத்திருந்து, வர வழைத்திருக்கிறார். இன்றைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம். கொள்கையில், அவரும் மாறவில்லை! நானும் மாறவில்லை! நாமும் மாறவில்லை! எப்படி தந்தை பெரியார் அவர்கள், தன்னந்தனியாக இந்த சமுதாயத்தை மாற்றினாரோ, அப்படியே அரங்கராசன் இந்த கிராமத்தை மாற்றி இருக் கிறார்” என்று பலமான கைதட்டல்களுக் கிடையே மனம் திறந்து பாராட்டினார். மேலும் அவர், “அரங்கராசன் என்ற ஒரேயொரு மனிதர், இவ்வளவு சாதனைகளையும் செய்திருக்கின்றார். அதற்கு ஒரே காரணம், பெரியார்! பெரியார்! பெரியார்!” என்று உணர்ச்சி பெருக் குடன் கூறி, அங்கிருந்தவர்களையும் அவ்வுணர்ச்சிக்கு ஆளாக்கி, உரையை நிறைவு செய்தார்.
நிகழ்வில், அரங்கராசன் குடும் பத்தைச் சேர்ந்த பா.வாலண்டினா – பாண்டி யன், இங்கர்சால் – ஆனந்தி, ரஷ்யா – தனராசு, எலிசபெத், இரா.ஜெயராமன், இரா.தர்மராஜன் உள்ளிட்டோர் மற்றும் உறவினர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் அயன் தத்தனூர் உயர்நிலைப்பள்ளி பட்ட தாரி ஆசிரியர் அரங்க.இங்கர் சால் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
