சென்னை, செப்.11 மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் நேற்று (10.9.2026) ஆதரவு தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று காலை (செப். 10) வந்த இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது, நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், இடைத் தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்தியக் குடியரசுக் கட்சியின் நிர்வாகிகளும் தோழர்களும் முழுமையாகப் பாடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள இத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் வழக்குரைஞர் இ. பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் வழக்குரைஞர் எஸ். சுகன்யா ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதை யடுத்து, எஸ்டிபிஅய் கட்சி திமுக வேட்பாளர்களுக்கு தனது முழு ஆதரவைத் தெரி வித்துக்கொள்வது எனத் தீர்மானித்துள்ளது. இவ்விரு வேட்பாளர்களும் கற்றறிந்தவர்கள்; மக்கள் பணிகளில் நீண்ட அனு பவம் கொண்டவர்கள். ஆகவே, இவர் களை மக்கள் அதிக வாக் குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவர் களின் மகத்தான வெற்றிக்கு எஸ்டிபிஅய் கட்சி தீவிரத் தேர்தல் களப் பணியாற்றும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
