நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வென்றால் அமெரிக்கர்களுக்கு 5000 டாலர் வழங்கப்படுமாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

டல்லாஸ், செப். 11- அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5,000 டாலர்கள் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.

டல்லாஸ் நகரில் 9.9.2026 அன்று நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் பேசுகையில், “வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், உங்களுக்கும் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டாலர் (ரூ.4.8 லட்சம்) கிடைக்கும். இது ட்ரம்ப் ஈவுத்தொகை என அழைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ஆனால், இத்திட்டத்திற்குத் தேவைப்படும் சுமார் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான பெருந்தொகை எங்கிருந்து திரட்டப்படும் என்ற விவரத்தை ட்ரம்ப் குறிப்பிடவில்லை. எனினும், நமது நாடு தற்போது அதிகளவில் வருவாய் ஈட்டி வருகிறது என்று மட்டும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், ஆதரவாளர்களி டையே உரையாற்றிய ட்ரம்ப், “வரும் இடைத்தேர்தலில் வாக் களிக்கும் போது, வாக்குச் சீட்டில் எனது பெயர் இருப்பதாகவே கருதிக்கொண்டு குடியரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஈரான் மீதான போர் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக ட்ரம்பின் ஆதரவு விகிதம் 30% ஆகக் குறைந்துள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *