சட்டம் – ஒழுங்கு சீர்கேடு தொடரும் நிலையில் காவல்துறையை திறமையான வேறு யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் தி.மு.க. எம்.பி கனிமொழி கண்டனம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 11- தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலைகள், கொள்ளைகள் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும், சட்டம் – ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்ற கோபத் தையும் ஏற்படுத்தி வருகிறது. முந்தைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டுவோம் என்று ‘மேஜிக் மேன்’ போல பேசி மக்களிடம் வாக்கு கேட்டார்.

தற்போதைய முதலமைச் சரின் கவர்ச்சிப் பேச்சில் மயங்கி இவர் வந்தால் சட்டம் –- ஒழுங்கு வேற லெவலுக்கு சென்று விடும் என்று நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் விசிலை ஊதினர். தவெக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ரசிக மனப் பான்மை அல்லாத வாக்கா ளர்கள் புரிந்து கொண்டனர் தாங்கள் ஊதியது விசில் அல்ல; சங்கு என்று!

இன்னும் ஒரு படி மேலே போய் முதலமைச்சரே அதை நிரூபித்தார். எப்படி என்றால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் என அனைத் திற்கும் சட்டம் –- ஒழுங்கு சரியில்லை, அரசு தான் பொறுப்பு என்று கூற முடியாது; ஏனென் றால் ஒவ்வொரு குற்றத்தின் பின்னணியிலும் குடும்ப பிரச்சினைகள், சொத்துத் தகராறுகள், பழிவாங்கும் படலம் என ஒவ்வொரு கார ணம் இருக்கிறது. எனவே ஒவ்வொரு தனி மனிதரும் பொறுப்பை உணர்ந்தால் தான் குற்றங்கள் குறையும் என்றார். இதை கேட்ட மக்கள் ஆடிப் போயினர்.

இந்நிலையில் தமிழ் நாட்டில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் கொலைகள் நிகழ்ந்து உள்ளன. அதில் உச்சகட்டமாக   தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை; காவல் அதிகாரி ஒருவரே மிரட்டுகிறார் என்று ஊடகங் களில் முன் தலைநகரில் கதறிய பிரதீப் ராஜ் என்ற இளைஞர், அடுத்த 24 மணி நேரத்திற்குள் படுகொலை செய்யப்பட்டது தான்! இந்நிலையில் அம் பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய் யப்பட்டுள்ள மற்று மொரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக் கிறது.

இப்படி தொடர்ச்சியான ‘படு கொலைகள்’ அரங்கேறி வரும் நிலையில், “முந்தைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று மக்களிடம் வாக்குக் கேட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார் முதலமைச்சர் விஜய். முதல மைச்சருக்கு காவல்துறையை கையாளத் திறனில்லை என்றால், அதைத் திறம்பட கையாளக்கூடிய வேறு யாரிடமாவது ஒப்படைத்து விட்டுப் போகட்டும். மக்களின் உயிருடன் விளையாட வேண் டாம்!’ என்று ஆவேசமாக தனது கருத்தினை பதிவிட்டுள்ளார் திமுக எம்பி கனிமொழி!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *