திண்டிவனம், செப். 11- திண்டிவனம் மாவட்டக் கலந்து ரையாடல் கூட்டம் 5.9.2026 அன்று மாவட்ட இளைஞரணித் தலைவர் மு. இரமேஷ் இல்லத் தில் மாவட்டத் தலைவர் இர.அன் பழகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது…
மாவட்ட இளைஞரணித் தலைவர் மு.இரமேஷ் அனை வரையும் வரவேற்று பேசினார். மாவட்டச் செயலாளர் தா.இளம்பரிதி, மாவட்டக் காப்பாளர் செ.பரந்தாமன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா.தம்பிபிரபாகரன், மாவட்ட துணைத் தலைவர் ச.அன்புக்கரசன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.பெருமாள், பொதுக்குழு உறுப்பினர்கள் பா.வில்ல வன்கோதை, தா.விஜயலட்சுமி தாஸ், நகரச் செயலாளர் சு.பன்னீர் செல்வம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நகர இளைஞ ரணித் தலைவர் ஓவியர் செந்தில், ப.க நகரச் செயலாளர் மா.குமார், மானூர் பா.செந்தில், ஒலக்கூர் ஒன்றிய துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, ஒலக்கூர் ஒன்றியச் செயலாளர் நா.இராஜராம், ஒலக்கூர் ஒன்றிய துணைச் செயலாளர் ப.அருள், மகளிரணி தோழியர் கஸ்தூரி, அமலா, தேன்மொழி. பெரியார் பிஞ்சுகள் கவிநிலவன், கவிஅமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிழ்ச்சியில் திண்டிவனம் முதல் புதுச்சேரி வரை நான்கு நாட்கள் நடைபெற்ற நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன நான்காம் குழுவின் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் தா.தம்பி பிரபாகரனுக்கு சிறப்பு செய்யப் பட்டது. நகர தலைவர் உ.பச்சை யப்பன் நன்றியுரை கூறினார்.
தீர்மானங்கள்
தந்தை பெரியாரின் பிறந்தநாளை சிறப்பாக கொண் டாடுவது,
தந்தை பெரியார் படத்தை வைத்து நகர ஊர்வலம்,
அனைத்து ஒன்றியங்களுக்கும் சென்று கழகக் கொடி ஏற்றுதல்,
செப்டம்பர் 26 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவது,
தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவது. எனக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
