பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செப்டம்பர் 26இல் மராத்தான் ஓட்டப்போட்டி மதுரை மாநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, செப். 11- மதுரை மாநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், மதுரை கீழ மாசி வீதியில் உள்ள பெரியார் மய்யத்தில், 09.09.2026 புதன்கிழமை மாலை 6 மணியளவில் நடை பெற்றது.

நிகழ்வுக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் இரா.லீ சுரேசு அனை வரையும் வரவேற்றார். தலைமைச்செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் தொடக்கவுரையாற்றி, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் பெரியார் உலகம் பற்றிக் குறிப்பிட்ட செய்திகளைக் குறிப்பிட்டார்.

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப் டம்பர் 17 இனிப்பு வழங்கி கொண்டாடுவது பற்றியும் தலைமை செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறை வேற்றுவது பற்றியும் குறிப்பிட்டார்.மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மராத்தான் ஓட்டப் போட்டி நடத்துவது பற்றி, மராத்தான் போட்டிகளை நடத்தும் சிறப்பு அழைப்பாளர் உடற்கல்வி ஆசிரியர் சரவணன் பேசுவார் எனக் குறிப்பிட்டு அவரைப் பேச அழைத்தார். மராத்தான் ஓட்டம் பற்றிய பல்வேறு அனுபவங்களையும், நடைமுறைகளையும் சரவணன் குறிப்பிட்டார். அது குறித்து கலந்துரை யாடல் நடைபெற்றது.

தொடர்ந்து பொறுப்பாளர்கள் ஒவ்வொருவராக தந்தை பெரியாரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண் டாடுவது பற்றியும் தங்கள் பகுதியில் செய்யவிருக்கும் ஏற்பாடுகள் பற்றியும் குறிப் பிட்டனர். பகுத்தறிவாளர் கழக மாவட்டத்தலைவர் ம.பால்ராஜ், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. சூழல் காரண மாக அது செப்டம்பர் 26ஆம் தேதி நடத்தப்படும் என அறிவித்து உரை யாற்றினார். இறுதியாக நடக்கவிருக்கும் பல்வேறு பணிகள் பற்றி இணைத்து தலைமைச்செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் உரையாற்றினார்.

நிகழ்வில் கழகப் பொறுப்பாளர்கள் செல்லூர் தனசேகரன், இரா.திருப்பதி, மளிகைக் கடை மாரி முத்து, வேல்துரை, இராஜா, ந.முருகேசன், தே.எ.செல்வப்பெரியார், க.சிவா, க.அழகர், செல்லத்துரை, காப்பாளர் சே.முனியசாமி, பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு ஆகியோர் கருத்துரைத்தனர். நிறைவாக க.சிவா நன்றி கூறினார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *