காஞ்சிபுரம், செப். 11- காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 7.9.2026 அன்று மாலை 6.00 மணியளவில், காஞ்சிபுரம், ஓரிக்கை, குறளகம், தமிழர் தலைவர் கூடத்தில், காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக துணைச் செயலாளர் சீத்தாவரம் ஆ. மோகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாநில கழக ஒருங்கிணைப் பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன், தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாளை கொடியேற்றி, இனிப்பு வழங்கி, பெரியார் பட ஊர்வலம் நடத்தி, ‘தந்தை பெரியார்148’ நூல் பரப்பி நன்றிப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என்ற தமிழர் தலைவரின் கருத்துகளை வெளிப்படுத்தி உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன், காஞ்சி மாநகர திராவிடர் கழகத் தலைவர் ந. சிதம்பரநாதன், காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா. இளம்பரிதி ஆகி யோர் முன்னிலை வகித்து உரை யாற்றினர்.
மாவட்ட கழகக் காப்பாளர் ச.வேலாயுதம், மாவட்ட இளைஞரணித் தலைவர் வீ.கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இ.ரவிந்திரன், போளூர் பன்னீர் செல்வம், நாகை லெனின், நெல் லுப்பட்டு ராமலிங்கம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மாவட்ட கழகச் செயலாளர் கி.இளையவேள் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
காஞ்சிபுரம் மாவட்ட கழகக் காப்பாளர் ச.வேலாயுதத்தின் அன்னையர் லட்சுமி அம்மாள் அவர்களின் மறைவுக்கு மாவட் டக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் ‘நீட் ஒழிப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி நடைபெற்ற பரப்புரைக் குழுவினருக்கு, மாவட்ட கழகத்தின் சார்பில் பாராட்டுதல் தெரிவித்து தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
3.9.2026 அன்று சென்னையில், கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலை மையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தந்தை பெரியாரின் 148 ஆவது பிறந்தநாளில் புத்தாடை அணிந்து, இலட்சியக் கொடியேற்றி, இனிப்பு வழங்கி, ‘தந்தை பெரியார் 148’ நூல் பரப்பி நன்றிப் பெருவிழாவாகக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாளையொட்டி ‘தந்தை பெரியார் பட ஊர்வலம்’ நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.
தமிழர் தலைவர் அவர்களின் விருப்பப்படி அடையார் ஆனந்த பவன் இனிப்பு வாங்கி பெரு மக்களுக்கு வழங்கி மகிழ்வதென தீர்மானிக்கப்பட்டது.
கழகக் குடும்பங்களின் ஒன்று கூடல் விழாவைச் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.
