
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாளையொட்டி 9.9.2026 அன்று திருச்சி திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் முதல் கட்டமாக தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, ஜமால் முகமது ஆகிய கல்லூரிகளில் திராவிடக் கொள்கைகள் அடங்கிய துண்டறிக்கை கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் சு.ராஜசேகர், இளைஞரணித் தலைவர் மு.பிரவீன் குமார், மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ஆ.அறிவுச்சுடர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
