நடப்புக் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் விதிவிலக்கு! சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செ.10– சிபிஎஸ்இயின் புதிய சுற்றறிக்கைப்படி, நிகழாண்டு மும்மொழிகளை கற்பதில் இருந்து 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இயிடம் உச்சநீதிமன்றம் நேற்று (9.9.2026) கேட்டுக்கொண்டது.

கடந்த ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவா்கள் 2 இந்திய மொழிகள் உள்பட மூன்று மொழிகளை கற்பது கட்டாயமாக்கப்படுவதாக சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்குத் தயாராவதற்கான அழுத்தம் 8-ஆம் வகுப்பிலேயே மாணவா்களுக்கு தொடங்கி விடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு 9-ஆம் வகுப்புடன் மூன்றாவது மொழி கற்பதை நிறுத்த வேண்டுமே தவிர, அந்த வகுப்பில் இருந்து மூன்றாவது மொழியை கற்பது தொடங்கக் கூடாது. அவ்வாறு செய்வது மாணவா்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.

புதிய சுற்றறிக்கையைப் பின்பற்றி மும்மொழி கற்பதை 6-ஆம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ கருதினால், அதை அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தலாம்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய் பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக நேற்று (9.9.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இயின் புதிய சுற்றறிக்கையின்படி, மூன்று மொழிகளைக் கற்பதில் இருந்து நிகழாண்டு 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இயிடம் நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *