கள்ளக்குறிச்சி, செப்.10 கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாந்தூரை சேர்ந்தவர் அய்யம் பெருமாள் மகன் செல்ராஜ் (வயது 40). இவர், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஏம்பப்பேர் விளாந்தாங்கல் ஏரிக்கரை பகுதியில் சாம்மாள் என்ற கோயிலை கட்டி வழிபாடு செய்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி இரவு பூஜை முடிந்ததும், செல்ராஜ் கோயில் கதவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை கோயிலுக்கு வந்து பார்த்தபோது கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கோயிலில் இருந்த சில்வர் குட உண்டியலை காணவில்லை. திருடுபோன உண்டியலில் ரூ.50 ஆயிரம் காணிக்கை பணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது
விசிக தலைவர் திருமாவளவன்
சென்னை, செப். 10- முதலமைச்சர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் . எந்தவொரு சூழலிலும் ஒருவரின் தன்மதிப்பை குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. முதலமைச்சர் இனி வரும் காலங்களில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நலம் பயப்பதாகும். சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் பேசியது வரலாற்றுப்பிழை என்று கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை தாமதம்!
செப்டம்பர் 8-ஆம் தேதியாகியும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு. திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உதவித்தொகை தாமதமான தால், அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க முடியாமல் பயனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
