வினை தீர்ப்பவனா விநாயகன்? விநாயகன் பொம்மை சரிந்து இரண்டு பக்தர்கள் காயம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

மும்பை, செப்.10 மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கொண்டு செல்லப்பட்ட மாபெரும் விநாயகர் சிலை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இளைஞர்கள் காயமடைந்தனர்.

மும்பை குர்லா மேற்கு (Kurla West) பகுதியில் உள்ள எல்.பி.எஸ். சாலையில் (LBS Road) அமைந்துள்ள ஷீத்தல் தலாவ் (Sheetal Talao) அருகே செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது. தாராவி பகுதியிலுள்ள ‘ஓம் சக்தி மித்ரா மண்டலம்’ (Prem Nagar) சார்பாக வழிபாட்டிற்காகக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 12 முதல் 15 அடி உயரமுள்ள மாபெரும் விநாயகர் சிலை, கட்கோபரில் உள்ள பட்டறையிலிருந்து டிரெய்லர் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டது.

வாகனம் அப்பகுதியிலுள்ள வேகத்தடையைக் (Speed breaker) கடந்தபோது, திடீரென ஏற்பட்ட குலுக்கல் காரணமாக நிலைதடுமாறி வாகனம் கவிழ்ந்ததில், சிலையும் சாலையில் விழுந்து சேதமடைந்தது. இந்த விபத்தின்போது சிலையைக் கவனித்து வந்த ஊர்வலக் குழுவைச் சேர்ந்த சந்தோஷ் ஜெய்ஸ்வால் (28) மற்றும் ரோஹித் ஜெய்ஸ்வால் (25) ஆகிய இரண்டு இளைஞர்கள் அதிர்ச்சியடைந்து லேசான காயங்களுக்குள்ளாகினர்.

உடனே அவர்கள் குர்லா பாபா மருத்துவமனை மற்றும் ஹபீப் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். பின்னர் விபத்தில் சேதமடைந்த விநாயகர் சிலை உள்ளூர் காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் அருகில் உள்ள ஷீத்தல் தலாவ் குளத்தில் கரைக்கப்பட்டதாம்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *