போதைப் பொருள்களை தடுக்க முடியவில்லையா? வழக்குகள் அதிகரித்து வருவதால் விரைவில் தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப்.9-  தனி நீதிமன் றங்கள் அமைப்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று (7.9.2026) இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, போதைப்பொருள் தடுப்புச் சட்ட வழக்குகளை உறுதியுடன் கையாள 449 தனிக்கோர்ட்டுகள் தேவைப்படுவதாகவும், அவற்றில் 176 கோர்ட்டுகள் ஏற்கனவே இயங்கி வருவதாகவும் கூறினார்.

அதற்கு நீதிபதிகள் கூறியதாவது:-

தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளையும், போதைப்பொருள் வழக்குகள் அதிகரித்து வருவதையும் பார்த்தால், நீதியின் நலம் கருதி, தேவையான 449 தனி நீதிமன் றங்கள் விரைவாக அமைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

இன்னும் 6 வாரங்களுக்குள்ளும், இந்த தனி நீதிமன்றங்கள் அமைக்கத் தேவையான உட்கட்டமைப்பை அளிப்பதுடன், தேவையான நட வடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

என்.அய்.ஏ. விசாரிக்கும் வழக்கு களுக்காக தனி நீதிமன்றம் அமைப்பது பற்றியும் விசாரணை நடந்தது.

அப்போது, தமிழ்நாடு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் இன்னும் 2 வாரங்களில் 2 என்.அய்.ஏ. நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். கர்நாடகா வில் 3 என்.அய்.ஏ. நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அதன் வழக்குரைஞர் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *