சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 9- சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் அமைந்த 17ஆவது சட்டப்பேரவையின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைக்கான கூட்டத்தொடர், ஆக.5ஆம் தேதி தொடங்கியது. அன்று பொது நிதிநிலை அறிக்கையும், 6ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.

ஆக.5ஆம் தேதி நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவின் முடிவின்படி, அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து பேரவையில் ஆக.12ஆம் தேதி வரை நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று, அதைத்தொடர்ந்து, துறைகள்தோறும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆக.17ஆம் தேதி தொடங்கியது.

அன்று முதல் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து துறைகள்தோறும் விவாதங்கள், அமைச்சர்கள் பதிலுரைகள் நடைபெற்றன. விவாதத்தின் இடையே நிதி ஒதுக்கச்சட்ட மசோதா உள்பட 11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர். அதைத் தொடர்ந்து பேரவை நிகழ்வுகள் குறித்த அறிக்கையை பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் வாசித்தார்.

தொடர்ந்து, பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப் பதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் முன்மொழிந்தார்.

இதையடுத்து, பேரவை மீண்டும் கூடும் தேதி குறி்ப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாக பேரவைத்தலைவர் ஜேசிடி.பிரபாகர் அறிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் மற்றும் மானியக் கோரிக்கை விவாதங்களில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

பார்வையாளர் வருகை தொடர்பாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் பேசும்போது, ‘‘கடந்த 2021ஆம் ஆண்டு 22,651 பேரும், 2023இல் 21,130 பேரும், 2024-ல் 10,754 பேரும், 2025ஆம் ஆண்டு 20,123 பேரும் பேரவை நிகழ்வுகளை பார்வையிட்டுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு கடந்த 28 நாட்களில் மட்டும் 32,055 பேர் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை பார்வையிட்டிருக்கிறார்கள்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், நிகழ்வுகளை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வம் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

விடுமுறை எடுத்துக்கொண்டு கூட பேரவையை காண வந்துள்ளனர். பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற மிகப்பெரிய ஆர்வம் இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *