தமிழ்நாட்டில் முதல்முறையாக நாடகக் கலையில் முதுகலை பட்டப்படிப்பு தொடக்கம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.9- தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்க உள்ளது.

இளைஞர்களுக்கு நடிப்பு திறனை மேம்படுத்தி நாடக கலையினை வளர்த்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் இப்பட்டப்படிப்பு தொடங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு “இளைஞர்களுக்கு நடிப்பு திறனை மேம்படுத்தி நாடக கலையினை வளர்த்திடும் நோக்கில்” தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்க உள்ளது.

முத்தமிழில் மூன்றாம் தமிழாக உள்ள நாடக்கலையின் வரலாறு கூத்து, இசை நாடகம், வரலாற்று நாடகம், புராண இதிகாச நாடகம், சமூக நாடகம், மவுன நாடகம் என பல பரிமாணங்கள் கண்டுள்ளது.

நாடகக்கலையின் முதுகலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படுவதன் மூலம் நடிப்பின் பல பரிமாணங்களை இளைஞர்கள் பெற முடியும் என்ற அடிப்படையில் கலை பண்பாட்டுத்துறை நாடகப்படிப்பில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்க அரசிடம் அனுமதி பெற்றது.

இதன் அடிப்படையில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.

இப்பட்டப்படிப்புக்கான ஆசிரியர் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மாதம் ரூ.25,000 தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன.

இப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நாடகக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வந்து சேர வேண்டும்.

முதுகலை பட்டப்படிப்பு (MTA – Master of Theatre Arts) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கடைசி நாள் 21.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *