தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்! அமைச்சர் அறிவிப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 9- தமிழ்நாடு முழுவதும் தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித் துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று (8.9.2026) புதிய அறிவிப்புகளை வெளி யிட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பேசியதாவது:

அரசுப் பேருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பேருந்துகளின் நிகழ்நேர கண்காணிப்பை மேம்படுத்தவும், 13,490 அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மற்றும் அவசர உதவி பொத்தான்கள் ரூ.17.99 கோடி செலவில் பொருத்தப்படும்.

மாநகர் போக்கு வரத்துக் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பணிமனையில் இயங்கும் 40 பேருந்துகளில் எரிபொருள் சென்சார் மற்றும் டயர் காற்றழுத்த கண்காணிப்பு அமைப்பு முன்னோடி திட்டமாக ரூ.16.34 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 7 ஆண்டுகள் பழமையான நல்ல நிலையில் உள்ள 100 டீசல் பேருந்துகள் மின்சார பேருந்துகளாக மாற்றப்பட்டு இயக்கப் படும். அதற்கு தேவையான மின்சாரக் கட்டமைப்பு வசதிகள் ரூ.13.60 கோடியில் ஏற்படுத்தப்படும்.

போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தலா 8 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 16 பேர் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, விருது வழங்கும் திட்டம் ரூ.10 லட்சத்தில் செயல் படுத்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் பயணிகளின் எளிதான, விரைவான மற்றும் பாது காப்பான கட்டண பரிவர்த்தனை வசதியை ஏற்படுத்த, தற்போது சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் நடைமுறையில் உள்ள ‘சிங்கார சென்னை’ தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் விரிவு படுத்தப்படும்.

சென்னை மந்தை வெளியில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் நாமக்கல் பரமத்திவேலூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் கட்டப்படும் என்பன உள்ளிட்ட 16 அறிவிப்புகளை வெளி யிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *