இஸ்ரோ நிர்வாகத்தை தனியார்மயமாக்கும் எண்ணமோ, திட்டமோ இல்லை – இஸ்ரோ திட்டவட்டம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெங்களூரு, செப். 9- இஸ்ரோ நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல் பாட்டுப் பணிகளைத் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்கத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், தனியார்மயமாக்கும் எண்ணமோ அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் திட்டமோ இல்லை என இஸ்ரோ மறுத்துள்ளது.

இஸ்ரோ ஊழியர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒன்பது அமைப்புகள், விண்வெளி முகமையைத் தனியார்மயமாக்கும் அரசின் கொள்கை மற்றும் ஊழியர்களின் எதிர்காலம் குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பி, இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்குக் கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தன.

இதனைத் தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வெளியான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை. இஸ்ரோ ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. அதன் முக்கியத்துவமும் எந்தக் காலத்திலும் குறையாது என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, தேசிய மற்றும் மூலோபாய திட்டங்கள், விண்வெளி அறிவியல் ஆய்வுகளில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இஸ்ரோ தொடர்ந்து செயல்படும்” என்று தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு என்பது இஸ்ரோவின் பங்கைக் குறைப்பதற்காக அல்ல என்றும், நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களைச் சந்தைப்படுத்துவதில் தனியார் துறை ஈடுபடும் போது, நாட்டின் அடுத்தகட்ட மேம்பட்ட விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோ கூடுதல் கவனம் செலுத்த இது வழிவகுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் விண்வெளித் துறையின் விரிவாக்கமே தவிர, தனியார்மயமாக்கல் அல்ல என்றும் இஸ்ரோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *