தலைமைச் செயற்குழுவின் அறிவிப்புகளைச் செயலாக்க
வடசென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
வடசென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
சென்னை, செப். 8- வடசென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 5.9.2026 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடல் அன்னை நாகம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பெரியார் பிஞ்சு திராவிட எழில் கடவுள் மறுப்புக் கூறினார். வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை வகித்தார். கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் முன்னிலை வகித்தார்.
வடசென்னை மாவட்டக் கழகச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், அமைப் பாளர் சி.பாசுகர், பொதுக்குழு உறுப் பினர் தி.செ.கணேசன், மாநில மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநில கழக இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்கள் க.இறைவி, வி.கே.ஆர்.பெரியார்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மாவட்ட ப.க. தலைவர் ஆர்.சண்முக நாதன், செம்பியம் கழகத் தலைவர் ப.கோபாலகிருட்டிணன், க.செல்லப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.கார்த்திக், துணைச் செயலாளர் த.பரிதின், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் த.மரகதமணி, மகளிரணித் தலைவர் த.இளவரசி, த.திராவிட இலக்கியா, த.திராவிட எழில், த.யாழ்தமிழ் மற்றும் தோழர்கள் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு கழகப் பணிகள் பற்றிக் கூறினர்.
குடும்ப விருந்து – பொதுக்கூட்டம்
– பேச்சுப்போட்டி
– பேச்சுப்போட்டி
கழக மகளிரணிப் பொறுப்பாளர்கள் குடும்ப விருந்து நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்துவது பற்றிக் குறிப்பிட்டனர். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் – பெரம்பூர் – அகரம் – பெரவள்ளூர் சதுக்கத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து, மாநாடு போன்று அப் பிறந்த நாள் விழா கூட்டத்தை நடத்துவோம் என்றனர். எழுச்சி மயமாய் அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதென்று முடிவு செய்தனர்.
பகுத்தறிவாளர் கழகம் சார்பில், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி நடத்தப்படுவதும், அதற்கெனப் பணிகள் ஆரம்பித்து நடைபெற்று வருவதையும் குறிப்பிட்டனர்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானத்தின்படி தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் திட்டமிட்டு வடசென்னை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட வேண்டுமெனக் கூறினார்.
பெரியார் ஓட்டம் – நடை
பெரியார் பன்னாட்டமைப்பு – அமெரிக்கா சார்பில் தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்பும் வகையில் பெரியார் ஓட்டம் – நடை உலகின் பல நாடுகளில் சிறப்பாக நடத்தப்பட்டு வருவது பற்றிக் குறிப்பிட்டு, அது போன்றதொரு நிகழ்வை மாவட்டக் கழகத் தோழர்கள் ஒருங்கிணைந்து நடத்த வேண்டுமென்றார்.
திராவிடர் கழகம் சார்பில் வெளி யிடப்படும் “பெரியார் கேட்கும் கேள்விகள்” புத்தகத்தை மக்களை நேரடி யாகச் சந்தித்து, குறைந்த நன்கொடை பெற்று, அவர்களிடம் கொடுத்துப் பிரச் சாரப் பணியைச் சிறப்பான வகையில் தோழர்கள் செய்திட வேண்டுமென்றார்.
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல், பெரியார் பட ஊர்வலம், கழகக் கொடியேற்றுதல், குடும்ப விருந்து எனப் பல விதமான நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்தப்பட வேண்டுமென்றார்.
இந்த ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் – கழகக் கொள்கை யாளர்களுக்கும், பொது மக்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கும் வகையில், “அடையார் ஆனந்த பவன்” ரூ.100, ரூ.300, ரூ.500 என அறிமுகப்படுத்துகின்ற பெரியார் பலகாரப் பெட்டியைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறிய கழகத் துணைப் பொதுச் செயலாளரிடம் அதனைப் பெற விரும்புகின்ற தோழர்களின் பட்டியல் தரப்பட்டது.
தீர்மானம்
17.9.2026, வியாழக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு பெரம்பூர் – அகரம் – பெரவள்ளூர் சதுக்கத்தில் தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை மிகச் சிறந்த முறையில் எழுச்சி மயமாய் நடத்திடத் தீர்மானிக்கப்படுகிறது.
கழகத் தலைமைச் செயற்குழு வகுத்துக் கொடுத்துள்ளவாறு தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் வடசென்னை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தி முடிப்பதென்று தீர்மானிக்கப்படுகிறது. இதற்கென்று மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட்டு செயலாற்றுவது என முடிவெடுக் கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
நிறைவாக மாவட்டத் துணைத் தலைவர் நா.பார்த்திபன் நன்றி கூறினார்.
