சென்னை, செப்.8 பெரும்பாலான கோயில்களில் கைப்பேசி சுவிட்ச்-ஆப் செய்து உள்ளே கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி தமிழ்நாட்டில் 52 கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது. விடுமுறை நாளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் கோயில்களில் கைப்பேசி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் கூட்டம் அதிகமாக காணப் பட்டதால் கோயிலுக்குள் கைப்பேசியை நிறுத்தம் சுவிட்ச்-ஆப் செய்து எடுத்து செல்ல அறநிலையத்துறை ஊழியர்கள் பக்தர்களுக்கு அறிவுறுத்தினர். கோயில்களுக்குள் கைப்பேசியை சுவிட்ச்-ஆப் செய்து கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டதற்கு பக்தர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் கைப்பேசியை வைத்துவிட்டு ரூ.5 கட்டணம் செலுத்திவிட்டு கோயிலுக்குள் செல்ல வேண்டும். தரிசனம் முடித்து திரும்பியதும் கைப்பேசியை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் (8.9.2026) விடுமுறை என்பதால் அரசு அறிவித்த 52 கோயில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ஆனால் கோயில்களில் 7 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் கைப்பேசிகளுக்கு மேல் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கும் வசதி பெரும்பாலான கோயில்களில் இல்லை. இதனால் அனைத்து கோயில்களிலும் கைப்பேசிகளை நிறுத்தம் (‘சுவிட்ச் ஆப்’) செய்து விட்டு கோயிலுக்கு செல்ல அற நிலையத்துறை ஊழியர்கள் பக்தர்களை அறி வுறுத்தினர். அதன்படி பக்தர்கள் தங்கள் கைப்பேசிகளை நிறுத்தம் செய்து விட்டு கோயிலுக்குள் சென்றனர். இதுகுறித்து இதனை முதலிலேயே அறிவித்திருக்கலாம் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
