திருப்பத்தூர், செப். 08- திருப்பத்தூர் அருகே “என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்” எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி நிர்வாணமாக ஊருக்குள் வலம் வந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், கரம்பூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 56). இவருடைய மனைவி (தீபா 48). இந்த இணையர்கள் கடந்த சில நாட்களாக வீட்டின் உள்ளே வினோ தமான பூஜைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென தங்களுக்குள் சாமி வந்து விட்டதாக கூறிக்கொண்டு, கணவன்-மனைவி இருவருமே ஆடைகளின்றி நிர்வாண நிலைக்கு மாறியுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக தெருக்களில் அவர்கள் வலம் வர, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அலறியடித்து வீட்டிற்குள் ஓடினர். விபரீதத்தை உணர்ந்து பொதுமக்கள் அவர்களை தட்டிக்கேட்டபோது, “எங்களை எதிர்த்தால் நீங்கள் அனைவரும் தடம் தெரியாமல் நாசமாகிவிடுவீர்கள்” என கணவன்-மனைவி இருவரும் ஊர் மக்களை நோக்கி சாபமிட்டு, மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, தங்களை சாமி வந்த கோலத்தில் அப்படியே மொபைலில் ‘லைவ் வீடியோ’ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கும்படியும் பழனி ஊர் மக்களிடம் வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இவர் களது அத்துமீறிய செய லால் செய்வதறியாது திகைத்த பொதுமக்கள், ஒருகட்டத் தில் பொறுமையிழந்து ஆவேசமடைந் தனர். சாமியாடிய இணையர்களை மடக்கி பிடித்து, கயிறுகளால் கட்டி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களின் பிடியில் இருந்த இணையரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் கரம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
