மீன்பிடி தடைகால நிவாரணத்தை உயர்த்தக் கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read

மதுரை, ஜூன் 9- தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.20 ஆயிரம் வழங்கக் கோரிய வழக்கில் தமிழ் நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தமிழ்நாடு கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரிகளின் இனப் பெருக்க காலமாக, ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந் துள்ளது.

மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் இந்தக் காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி தமிழ் நாட்டில் இந்த ஆண் டுக்கான 61 நாள் மீன் பிடித் தடைக்காலம் ஜுன் 14 தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மோர்பண்ணையைச் சேர்ந்த தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர் களுக்கு ரூ.8,000 வழங்கப் படுகிறது.

இந்தத் தொகை மீனவர்களின் வாழ் வாதாரத்துக்கு போதுமானதாக இல்லை.

ஆந்திரா, கோவா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் மீன் பிடி தடைக் காலத்தில் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது.

அதேப்போல் தமிழ்நாட்டிலும் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பில், பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சிக்கு வந்துள்ள தவெக தரப்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.

அரசு தரப்பில், மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனக் கூறப்பட்டது. பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாக உள்துறை செயலர், நிதித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *