பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் தோல்வி பயிற்சி பெற்றவர்களில் ஏழு விழுக்காடு பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது!

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஒன்றிய அரசு இணையதளத்தில் தகவல்

புதுடில்லி, செப்.7- ஒன்றிய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்களில் 7 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

ஒன்றிய அரசின் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் (PMKVY), கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

இந்தத் திட்டமானது, தொழிற்துறைக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதையும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், இந்தத் திட்டத்தின் மூலம் (ஆகஸ்ட் மாத நிலவரப்படி) பயிற்சி பெற்ற 28.5 லட்சம் விண்ணப்பதாரர்களில் 2 லட்சம் பேர் (7.73%) மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, பயிற்சிக் காலத்திலேயே கணிசமான அளவில் பயிற்சி பெறுபவர்கள் விலகுவதாகவும் தரவுகள் காட்டுகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் பதிவுசெய்த 35.4 லட்சம் விண்ணப்பதாரர்களில் சுமார் 6.83 லட்சம் பேர் (19%) பயிற்சிக் காலத்திலேயே விலகியுள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் வேலை பெற்றவர்களைவிட, பயிற்சிக் காலத்தில் விலகியவர்களின் எண்ணிக்கை 3 மடங்குக்கும் அதிகமாக உள்ளது.

விண்ணப்பித்து பயிற்சி பெற்றவர்களுக்குத் தொலைத் தொடர்புத் துறையில் (17.5%) அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து கைவினைத் துறை (14.4%), ஜவுளித் துறை (13.3%) வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *