நீதிபதியிடம் வரம்புமீறிய வழக்குரைஞர் 1,000 மரக்கன்றுகள் நட நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெங்களூரு, செப்.7-கருநாடக உயர் நீதிமன்ற வழக்குரைஞரான எஸ். ரங்கசாமி, நீதிபதியிடம் கண்ணியமின்றி நடந்து கொண்டதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட் டிருந்தது. அவர் மன்னிப்புக் கோரியதையடுத்து, அந்த அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் திரும்பப்பெற்றது.

இருப்பினும், அவருக்கு தண்டனையாக அரசு நிலங்கள் அல்லது கல்வி நிலையங்களில் 1,000 கனி தரும் மரக்கன்றுகளை நட்டு, அவற்றுக்கு நீர் பாய்ச்சி, உரமிட்டுப் பராமரிக்க வேண்டும் என நீதிபதி ஹன்சாட்டே சஞ்சீவ்குமார் உத்தரவிட்டார்.

அத்துடன், பல்லாரி மாவட்ட சட்டச் சேவைகள் ஆணையத்திற்கு 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கட்டணம் செலுத்தியதற் கான சான்றையும், மரங்கள் நட்டதை உறுதி செய்யும் அறிக்கையையும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அவர் தாக்கல் செய்ய வேண்டும். மரக்கன்றுகள் நட்ட விவரம் நவம்பர் 2ஆம் தேதி நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும்.

வழக்குரைஞர் என்பவர் பொதுமக்களுக்காக வாதாடும் பிரதிநிதியே அன்றி, சொந்த விவகாரம் போல் நடந்துகொண்டு நீதிமன்றத்தின் கண்ணி யத்தைக் குலைக்கக் கூடாது என்றும் நீதிபதி சுட்டிக் காட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *