காங்டாக், செப். 7- வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்து, நேற்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் முறைப்படி வெளியிடப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்தத் திருத்தப் பணிகளின் முடிவில், வரைவுப் பட்டியலில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,33,294-லிருந்து 4,18,467 ஆகக் குறைந்துள்ளது.
இந்த சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையின் மூலம், தகுதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மொத்தம் 52,551 பெயர்கள் (சுமார் 11 சதவீதம்) வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
