பிலிப்பைன்ஸ் துணை அதிபருக்குக் கைது ஆணை: நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றார் சாரா டுட்டார்டே

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மணிலா, செப். 7- பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், பிலிப்பைன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டார்டே நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றுள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய துணை அதிபர் சாரா டுட்டார்டே, அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக் குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், தனது பேச்சை ஊடகங்களும் அதிகாரிகளும் தவறாகப் புரிந்து கொண்டதாக சாரா விளக்கமளித்திருந்தார்.

கொலை மிரட்டல் குற்றச்சாட்டின் அடிப் படையில் சாராவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் சமீபத்தில் கைது ஆணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அவர், பிணை மனுத் தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தர விட்டதை அடுத்து, சாராவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த கைது ஆணை ரத்து செய்யப்பட்டது.

ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பிலிப் பைன்ஸ் செனட் அவையில் பதவிநீக்க விசாரணையை  சாரா எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், இக்கொலை மிரட்டல் வழக்கும் தீவிர மடைந்துள்ளது அவருக்கு மேலும் பெரிய சட்டச் சிக்கலையும் அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *