அந்தியூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அந்தியூர், செப். 7- 05.09.2026 அன்று அந்தியூர் சமுதாயக் கூடத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, நீட் தேர்வு மோசடி, EWS உயர் ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு மோசடி உண்மை விளக்க கருத்தரங்கம்   நடைப்பெற்றது.

இந்த கூட்டத்திற்கு அந்தியூர் ஒன்றியத் தலைவர் க.கோவிந்தன் தலைமை ஏற்று உரையாற்றினார். அந்தியூர் ஒன்றியச் செயலாளர் கு.பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் அ.பொன்முகிலன், மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் க.யோகா னந்தம், மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் வழக்குரைஞர் த.சிவபாரதி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மா.சூர்யா முன்னிலை வகித்தனர்.

மாவட்டத் தலைவரும், மாநில வழக்குரைஞர் அணி செயலாளருமான வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தொடக்க உரை ஆற்றினார். கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ மதிவதனி சிறப்புரை ஆற்றினார். அந்தியூர் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஏ.ஜி வெங்கடாசலம் வாழ்த்துரை ஆற்றினார்.

இறுதியாக, தமிழ் உணர்வார்கள் கூட்டமைப்பின் தலைவர்
இரா. பெருமாள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி. வைத் தீஸ்வரன்,  அனைத்து இளைஞர் பொதுநல அமைப்புத் தலைவர் த.கு.பத்மநாபன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் த.ப கோவிந்தராஜ், தமிழ் உணர் வாளர்கள் கூட்டமைப்பு மு.ராச வேல், ச.சரவணன், கோ. தனபால், நடராஜ், ச.செங்கோடன், கோ.சவு மியா மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் அ.அஜித் குமார், மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் ப.திலகவதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிவேல், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் த.எழிலரசு, மாவட்ட மகளிர் பாசறைச் செயலா ளர் திவ்யா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *