

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித் தோழர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, இன்று (30.05.2026) காலை 10 மணிக்குப் பெரியார் மருந்தியல் கல்லூரி அரங்கத்தில் தொடங்கியது. “தந்தை பெரியாரால் விளைந்த கல்விப் புரட்சி” எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதல் வகுப்பினை எடுத்தார். ஆசிரியர் அவர்களுக்குக் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை சிறப்பு செய்தார்.
