பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம் விஷச் சாராயம் குடித்து 11 பேர் பரிதாப உயிரிழப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

சாகர், செப்.6 மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்த 11 பேர் பரிதாப மாக உயிரிழந்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாகர் மாவட்டத்தில் உள்ள கூகர் மற்றும் நவுராஜ் உள்ளிட்ட கிராமங்களில் சிலர் சட்டவிரோதமாக விற்கப்பட்ட சாராயத்தைக் குடித்துள்ளனர். சாராயம் அருந்திய சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அருந்திய சாராயத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அதில் அதிக அளவிலான எத்தில் ஆல்கஹால் கலந்திருந் ததே உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோத சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *