வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பி.க்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

பின்னணி என்ன?

புதுடில்லி, செப்.5 எப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளு மன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசு சாரா தொண்டு நிறுவ னங்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டத்திருத்த மசோதா (எப்சிஆர்ஏ)வுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒன்றிய பாஜக தலை மையிலான என்டிஏ அரசாங்கம் எப்சிஆர்ஏ மசோதாவை கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வர எத்தனித்தது.

ஆனால் ஆகஸ்ட் 12 அன்று மக்களவையில் எதிர்க்கட்சி களின் கடும் எதிர்ப்பு மற்றும் விவா தங்களுக்குப் பிறகு மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய முடிவெ டுக்கப்பட்டது. இந்நிலையில் எப்சிஆர்ஏ மசோதாவை ஆய்வு செய்ய 31 நாடாளும்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.

இந்த கூட்டுக்குழுவில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமை வகிப்பார். இதில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசை சேரந்த 5 எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளனர். திமுகவின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சமாஜ்வாதி, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலா 1 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மம்தா அவர் களின் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர். 2014 முதல் பல சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. அவ் வாறான மசோதாக்களை ஆய்வு செய்ய அமைக்கப்படும் 19வது நாடா ளுமன்ற கூட்டுக் குழு இது. 2024இல் இருந்து 9ஆவது கூட்டுக்குழு இது.

கடந்த 1976 ஆம் ஆண்டு அப் போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் எப்சிஆர்ஏ சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இந்த சட்டத்தில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டன.

கடந்த 2020 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ அரசின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் எப்சிஆர்ஏவில் மேலும் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டன. தற்போது மேலும் அதில் 3 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகளின் சொத்துக்களை நிர்வகிக்கவும், தேவைப்பட்டால் அவற்றை விற்கவும் ஒரு தனி அதிகாரியை அரசு நியமிப்பது,

உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகள் தங்களின் வெளிநாட்டு நிதி மற்றும் அசையும், அசையா சொத்துகளைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் விதிகளைப் பூர்த்தி செய்யாத அமைப்புகளின் சொத் துக்களை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுப்பது ஆகியவை புதிய திருத்தங்கள் ஆகும்.

இது குறித்து புதிதாக அமைக் கப்பட்ட கூட்டுக்குழு  செய்து தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளது. இதன் பின் மசோதா அடுத்த கூட்டத் தொடரில் மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *