நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் கூட்டத்தை முடித்துக்கொண்டு, இந்த ஊரை விட்டே போய்விடவேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தனர் காவல்துறையினர், 1954 இல்!
‘‘இது நியாயம் அல்ல; எல்லாருக்கும் சமவாய்ப்புக் கொடுக்க வேண்டாமா?’’ என்றோம்!
‘‘இது நியாயம் அல்ல; எல்லாருக்கும் சமவாய்ப்புக் கொடுக்க வேண்டாமா?’’ என்றோம்!
விருதுநகரில் 1930–1932 ஆம் ஆண்டிலேயே சுயமரியாதை இயக்க மாநாடு நடந்தது!
ராஜபாளையம், செப்.5 நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் கூட்டத்தை முடித்துக்கொண்டு, இந்த ஊரை விட்டே போய்விடவேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தனர் காவல்துறையினர், 1954 இல்! ‘‘இது நியாயம் அல்ல; எல்லாருக்கும் சமவாய்ப்புக் கொடுக்க வேண்டாமா?’’ என்றோம்! விருதுநகரில் 1930–1932 ஆம் ஆண்டிலேயே சுயமரியாதை இயக்க மாநாடு நடந்தது! என்று பழைய நினைவுகளைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ராஜபாளையத்தில் ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’
நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’!
நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’!
்கடந்த 20.08.2026 அன்று மாலை 5.30 மணிக்கு, விருதுநகர் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’ ராஜபாளையம் மதுரை ராஜா கடை தெருவில், ஏ.எஸ்.ஆர்.தங்கராசா அவர்களின் நினைவாக மேடை அமைக்கப்பட்டு நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு::
விருதுநகரில் 1930–1932 ஆம் ஆண்டிலேயே கழக மாநாடு நடந்திருக்கிறது!
பெரியாருடைய பயணம் எதிர்நீச்சல் பயணம், 80 ஆண்டுகளுக்கு முன்னாலே எப்படி இருந்தது? என்பதை ஒவ்வொரு பெரு நகரங்களிலும் விளக்கிக் கொண்டு வருகிறோம். இந்தப் பகுதியில் குறிப்பாக விருதுநகரில் 1930–1932 ஆம் ஆண்டிலேயே மாநாடு போட்டிருக்கிறார்கள். ஆனால், ராஜபாளையம் பகுதி மிகவும் விசித்திரமான ஒரு பகுதி. எனக்கு அந்த அனுபவம் எல்லாம் உண்டு. அதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய இளைய தலைமுறை இவ்வளவு மகிழ்ச்சியாக இந்த அரங்கத்திலே பங்கேற்க, காவல் துறையினுடைய சிறந்த ஒத்துழைப்போடு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஒன்றைக் குறிப்பிட வேண்டும். தோழர்களே, இளைய தலைமுறையினருக்குத் தெரியாது. என்னுடைய பொதுவாழ்க்கை 83 ஆண்டுகள். மாணவப் பருவத்தில் இருந்து நான் இந்த இயக்கத்திற்கு வந்தவன். அப்போது ஓர் அனுபவம். திராவிட மாணவர் கழகம் சார்பாக, ராஜபாளையத்தில் இருந்த தோழர் பொன்னுசாமி என்ற மாணவர் ஒரு கடிதம் எழுதுகிறார். நான், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே, பொருளாதாரத்தில் ஆனர்ஸ் வகுப்பு முதலாண்டு படிக்கிறேன். ‘‘அய்யா நீங்கள் வர வேண்டும்’’ என்று என்னை அழைத்தனர். முதுபெரும் திராவிடர் கழகத் தோழர்கள் எல்லாம், அவருக்குத் துணையாக இருப்பார்கள். துரைராஜ், தங்கராசா போன்றவர்கள் திராவிடர் கழகத்தில் இருக்கக்கூடியவர்கள். முதல் முறையாக மதுரைக்கு வந்து, இங்கே ராஜபாளையத்திற்கு வருகிறோம். மதுரை மாவட்டச் செயலாளர் பழனிவேலு மற்ற தோழர்கள் எல்லாம் எங்களோடு வருகிறார்கள். 1954 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது.
நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் கூட்டத்தை முடித்துக்கொண்டு,
இந்த ஊரை விட்டே போய்விடவேண்டும்!
இந்த ஊரை விட்டே போய்விடவேண்டும்!
கூட்டம் எத்தனை மணிக்கு என்று கேட்கி றோம். காவல் துறையினர் சொல்கிறார்கள், ‘‘இந்த ஊரில், உங்களுடைய திராவிடர் கழகம், திராவிட இயக்கக் கூட்டங்களுக்கு அனுமதியே கொடுப்பதில்லை. ஆனால், இப்பொழுது அனுமதி கொடுக்கிறோம். நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் கூட்டத்தை முடித்துக்கொண்டு, இந்த ஊரை விட்டே போய்விடவேண்டும். 6.30 மணிக்கு மதுரைக்கு ஒரு ட்ரெயின் இருக்கிறது; நாங்களே, ஸ்டேஷன் வரையில் கொண்டு வந்து விடுகிறோம், உங்களை. ஏனென்றால், இங்கே மற்றவர்கள், ரொம்ப செல்வாக்குள்ள கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். கலவரம் ஏற்பட்டு, சட்டம் – ஒழுங்குக்கு பங்கம் வந்தால், நாங்கள் சமாளிக்க முடியாது’’ என்று சொன்னார்கள். செல்வாக்குள்ளவர்கள் – யார் அவர்கள்? அந்தக் காலத்து காங்கிரஸ் நண்பர்கள், தங்கள் கட்சி மட்டும்தான் 10 மணி வரையில் கூட்டம் நடத்த முடியும் என்று வரையறை செய்து வைத்தி ருந்தார்கள். அதற்கு முதல் வாரத்தில்தான், தி.மு.க. அமைப்புச் செயலாளர் என்.வி.நடராஜன் அங்கே நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அந்த கூட்டத்தில் கல் வந்து விழுந்தது; அங்கே லேசாகக் கலவரம் ஏற்பட்டது; உடனே காவல் துறையினர் அவருக்குப் பாதுகாப்பாக இருந்தனர். ஆனாலும், அவர் அசந்து விடவில்லை; கூட்டத்தில் பேசினார். அந்த அனுபவத்தைத்தான் எங்களிடம் சொன்னார்கள். காவல் துறையினர் மீண்டும், ‘‘போன வாரம் என்.வி.நடராசன் என்பவர் வந்தார்; தி.மு.க. கூட்டம் நடந்தது, அதில் இந்த மாதிரி ஏற்பட்டது; அதனால் நீங்கள் 6.30 மணிக்கு எல்லாம் கூட்டத்தை முடிக்கவேண்டும்’’ என்றார்கள்.
‘‘எல்லாருக்கும் அந்த சமவாய்ப்புக்
கொடுக்க வேண்டாமா?’’
கொடுக்க வேண்டாமா?’’
‘‘நாங்கள் கட்டுப்பாடு உள்ளவர்கள் தான்; காவல் துறை சொன்னால், அதன்படி நடப்போம். ஆனால், இது நியாயம் அல்ல’’ என்று காவல்துறையினரிடம் சொல்லிவிட்டு, ‘‘எல்லாருக்கும் அந்த சமவாய்ப்புக் கொடுக்க வேண்டாமா?’’ என்று கேட்டோம். அன்றைக்கு காங்கிரஸ் ஆட்சி; டில்லியிலும் அதே ஆட்சி. ஆகவே, யார் இருக்கிறார்களோ, அவர்களுக்குத் தகுந்த மாதிரி, நடக்க வேண்டிய அவசியம் அன்றைக்கும் காவல்துறைக்கு இருந்தது. அதனுடைய நிலையினால்தான், அவர்கள் என்ன சொன்னார்களோ, அதைக் கடைப்பிடிக்கிறோம் என்று சொன்ன உடனே கூட்டம் நடந்தது. இது அன்றைக்கு ஏற்பட்டதொரு அனுபவம்.
சிவகங்கை சண்முகநாதன் –
என்.ஆர்.சாமி!
என்.ஆர்.சாமி!
ஆனால், அதே நிலைமையைத் தாண்டி, மிகப்பெரிய அடுத்த கட்டம் என்னவென்றால், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள்ளே தந்ைத பெரியார் வந்தார். அய்யா வந்த காலத்தில், அதேபோன்று காவல்துறையினர் சொன்னார்கள். ஆனால், அய்யா அவர்கள், ‘‘என்னைக் கட்டுப்படுத்த முடியாது’’ என்று கூறிவிட்டார். மக்கள் ஏராளமாகத் திரண்டார்கள். இது நடந்தது 1956 ஆம் ஆண்டு. பழைய ராமநாதபுரம் மாவட்டம்; அப்பொழுது பிரிக்கப்படவில்லை. அப்போது ராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சிவகங்கை சண்முகநாதன். இராமச்சந்திரன் சேர்வை அவர்களுடைய குடும்பம் பிரபலமானது. அதே மாதிரி காரைக்குடியில் பிரபலமாக இருக்கக்கூடிய என்.ஆர்.சாமி. அவர்தான் மாவட்டச் செயலாளர். அவர்கள் இரண்டு பேரும்தான் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.
மேடைக்குப் பெயர் ஏ.எஸ்.ஆர்.தங்கராசா…
இந்த ஊரில், ஒருவர், இரண்டு பேர் நம்முடைய தோழர்கள் இருப்பார்கள். இந்தப் பட்டியலில் இருந்த பழைய தோழர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இந்த மேடைக்குப் பெயரே தங்கராசா நினைவு மேடை. பெரிய அளவுக்குத் தி.மு.க.விற்குப் போன பிறகுகூட, இயக்கம் இங்கு செழிப்பாக இருந்தது. தோழர் ஆதிநாரா யணன்கூட தி.மு.க.விற்குப் போனார். அவர், பெரியார் அவர்கள் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர்; பழைய ‘குடிஅரசில்’ அது சம்பந்தப்பட்ட விவரங்கள் இருக்கும்.
அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே, அவரை நூலக ஆணைக்குழுத் தலைவராக நியமித்தார். இவையெல்லாம் இங்குள்ளத் தோழர்களுக்குத் தெரியும். கடைசி வரையில் அவர் சுயமரியாதைக்காரர். அந்தக் கொள்கையில் அவர் கொஞ்சம் கூட மாறவே மாட்டார். ஆதிநாராயணன், எங்களுக்கெல்லாம் உற்சாகத்தைக் கொடுக்கிறவர்; வந்து சந்திப்பார், உற்சாகத்தைக் கொடுப்பார். ‘பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்று ஊக்கப்படுத்துவார்.
மம்சாபுரம் லெனின்
அதேபோல ஒரு பெரிய பட்டியல் – துரைசாமி, தையலார் துரைராஜ், துளசிமணி, அங்கமுத்து, சங்கமுத்து, வேலாயுதம், செந்தட்டிக்காளை, கணபதி, காளியப்பன், பழக்கடை மாடசாமி, சேதுராமலிங்கம், மம்சாபுரம் லெனின். பிறகு டாக்டர் பாலன் போன்றோர்.
மறைந்த தோழர்களின் உழைப்புதான் –
எதிர்ப்பைச் சமாளித்தது!
எதிர்ப்பைச் சமாளித்தது!
அந்த காலத்திலேயே லெனின் மம்சாபுரத்தில், ஒரு மளிகைக் கடை வைத்திருப்பார். தீவிரமானவர். சுயமரியாதைக் கட்டுரைகளை எழுதுவார், சோசலிசத்தைப்பற்றி. அய்யா ரஷ்யாவுக்குப் போனதைப் பற்றி, படித்துப் பார்த்த உடனே, தன்னுடைய பெயரை லெனின் என்று மாற்றிக் கொண்டவர். மம்சாபுரம் லெனின் என்று சொன்னால், பல பேருக்குத் தெரியும், அந்தக் குடும்பத்தை அனைவரும் அறிவர். அதேபோல, டாக்டர் மாறன், அதேபோல கருப்புத் துண்டு மாரியப்பன் அவர்கள், அதேபோலத்தான் செல்வ மீனாள் ஓட்டல் துரைசாமி அவர்கள், இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். டாக்டர் மாறன் வெளியூரில் இருந்து பிராக்டீசுக்கு வந்தார். ஆனாலும், அவரே மாவட்டத் தலைவராகப் பொறுப்புக்கு வந்தார். பகுத்தறிவாளர் கழகத்தில் இருந்து, பிறகு மாவட்டத் திராவிடர் கழகத் தலைவராக வந்தவர். அதேபோல மருத்துவர் ஓ.எம்.பாலன் அவர்கள். இவர்தான் மம்சாபுரத்தில் ஒரு கிளினிக் ஆரம்பித்தார். மருத்துவமனை ஒன்றைக் கட்டி, அதைத் திறந்தார். முகவூர் பழனிச்சாமி, முகவூர் பன்னீர்செல்வம், அதே போல மாணவர் கழகத்தில் மிக உறுதியாக இருந்தவர், மற்றவர்களுக்கெல்லாம் துணையான செயல்வீரராய் இருந்தவர் பொன்னுசாமி, மானமிகு தமிழ்மணி, பொ.சு. நடராஜன், சந்திரன் இப்படி நிறைய தோழர்கள் உண்டு. அவர்களை எல்லாம் இங்கே நினைவுபடுத்தி இருப்பதுதான் இந்த மாநாட்டுக்கு ஒரு பெரிய சிறப்பு. மறைந்த தோழர்கள் – அவர்கள்தான் – இந்த மேடைக்குச் சிறப்பு – அவர்களுடைய உழைப்பு – எதிர்ப்பைச் சமாளித்தது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், அங்கே கூட்டம் நடந்தது.
(தொடரும்)
