பார்ப்பனர்களின் வீட்டுத் திருமணத்தில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவார்களா?
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்றால், அது திராவிடம்!
ஜாதி இருக்க வேண்டும் என்றால், அது ஆரியம்!
‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்றால், அது திராவிடம்!
ஜாதி இருக்க வேண்டும் என்றால், அது ஆரியம்!
‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
சென்னை, ஜூலை 18 ‘‘நான் எந்த அடிப்படையில் ஆரியம் – திராவிடம் என்று சொல்கிறேன் என்றால், கொள்கை அடிப்படையில் திராவிடம் என்று சொல்கி றோம். ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்றால், அது திராவிடம். ஜாதி இருக்க வேண்டும் என்றால், அது ஆரியம்’’ என்று தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
்கடந்த 6.7.2026 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில், ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு ரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
‘‘ஏங்க, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பார்ப்பனர் அல்லாதவர் தானே? அவர் ஏன் அய்.என்.ஏ (INA) அமைப்பை உருவாக்கினார்?’’ என்று நீங்கள் கேட்கலாம்.
காங்கிரசை பின்னாளில் புரிந்து கொண்ட போது யாருமே ஏற்கவில்லை!
காங்கிரஸ் கட்சியின் மீது இருந்த கடுமையான அதிருப்தியின் காரணமாகவே அவர் அங்கிருந்து வெளி யேறினார். அப்போது அவருக்குப் புகலிடம் கொடுத்த ஒரே நாடாகவும், சாதகமாக இருந்த இடமாக வும் ஜப்பான் மட்டுமே விளங்கியது. அங்கு ஒரு ஜப்பானியப் பெண்ணையே திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கும் அவர் ஆளானார். எனவே, பிரிட்டிஷாரை எதிர்த்தால் மட்டுமே முழு சுதந்திரம் கிடைக்கும் என்று அவர் உண்மையாகவே நம்பியிருக்கலாம்; அதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், இறுதியில் அவரே கூட ஏமாற்றமடையும் சூழல்தான் ஏற்பட்டது.
காங்கிரசை பின்னாளில் புரிந்து கொண்ட போது யாருமே ஏற்கவில்லை. பார்ப்பனரா, மற்றவர்களா? என்பதைப்பற்றி அவருக்குக் கவலை இல்லை. கேப்டன் லட்சுமி போன்றவர்கள் எல்லாம் வந்தார்கள் என்று சொன்னால், அவர்களே மிகப்பெரிய அளவுக்கு எங்கே போய் நின்றார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெளிவாகத் தெரியும்.
ஜெர்மன், ஜப்பான் மொழிகளை
முதலில் படித்தவர்கள் பார்ப்பனர்கள்!
முதலில் படித்தவர்கள் பார்ப்பனர்கள்!
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஜப்பான்காரன் பர்மாவை பிடித்து, கல்கத்தா வரையில் வந்தபோது, சென்னை மயிலாப்பூர் மாம்பலத்தில் உள்ள பார்ப்பனர்கள் ஜெர்மன், ஜப்பான் மொழிகளை படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த மொழிகளை முதலில் படித்தவர்கள் அவர்கள்தான்.
‘பாம்பு திங்க வேண்டும்’ என்று ஒரு நாட்டுக்காரன், ஊர்க்காரன் வந்தால், முதலில் பார்ப்ப னர்கள்தான், பாம்பின் நடுக்கண்டம் எங்கே? என்று கேட்பார்கள். முத லில் வெள்ளைக்கார மொழியான ஆங்கில மொழியைப் படித்தவன் அவன்தான். ‘மிலேச்ச பாஷை’ என்று மற்றவர்க ளுக்குச் சொன்னார்கள். அது ‘மிலேச்ச பாஷை’ அதெல்லாம் படிக்காதீர்கள் என்று நமக்கு சொன்னான்.
ஆனால், அவர்கள்தான் முதலில் அந்த மொழியைப் படித்தார்கள். அதே மாதிரி ஜப்பான் நாட்டினர் கல்கத்தா வரைக்கும் வந்துவிட்டார்கள் என்று சொன்ன உடனே, ஜப்பான் மொழி, ஜெர்மன் மொழிகளைப் படித்தார்கள் அவர்கள்.
உறுதியாக நின்ற
ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான்!
ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான்!
அவ்வளவு தூரம் போக வேண்டாம், 1962 ஆம் ஆண்டு வாக்கில் சீன ஆக்கிரமிப்பு நடந்தபோது, ஒரு கூட்டத்தினர் சீன மொழியைப் படிக்க ஆரம்பித்தார்கள். அந்தக் கூட்டம் யார்?
இவற்றையெல்லாம் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்ன ஒரே பத்திரிகை ‘விடுதலை’தான்; ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான். ‘‘நீ எங்களை என்ன வேணாலும் சொல்லிவிட்டுப் போ’’ என்று உறுதியாக நின்ற இயக்கம் இது.
‘விடுதலை’ அரசு ஏடாக வந்ததற்கு என்ன காரணம் என்று புரிகிறதா? இந்தக் கருத்துகளைச் சொன்ன போது, இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு மிக முக்கியமான நம்முடைய தோழர் ஒருவர், இன்னொரு ஆதாரத்தை நமக்கு அனுப்பினார். அவர் ஒரு பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். முழுக்க முழுக்க நமது கருத்தோட்டத்தோடு இருக்கக்கூடிய ஒரு நல்ல சிந்தனையாளர் – பெரியார் வழிப்பட்ட சிந்தனையாளர். அவர், சென்ற சொற்பொழிவை ‘விடுதலை’யில் படித்துவிட்டு, இன்னொரு நல்ல செய்திகளை நினை வூட்டினார்.
சிறந்த வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பார்!
அவர் ஒரு நிகழ்வை இணைத்துச் சொன்னார்.
In on Interview appeared in Hindu dated 21.6.2006.
உங்களுக்கெல்லாம் தெரியும், பழங்காலத்தைப் பற்றி மிகச் சிறந்த அளவிற்குப் பேசக்கூடிய ஒரு சிறந்த வரலாற்று ஆசிரியர், வாழும் நிலையில் இருக்கக்கூடிய வரலாற்று ஆசிரியர் அந்த அம்மையார். அந்த ரொமிலா தாப்பார் அவர்கள், இடதுசாரி சிந்தனையாளர்.
முற்போக்குச் சிந்தனையாளர் என்பதற்காகவே அந்த அம்மையாரை ஒன்றியத்தில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தவுடனே, விலக்கி வைத்துவிட்டார்கள். அந்த அம்மையார், 21.6.2006 ‘இந்து’ நாளிதழுக்குப் பேட்டிக் கொடுத்ததை நம்முடைய கவனத்திற்குக் கொண்டு வந்தார். எனக்கு அந்தச் செய்திகளை அனுப்பினார்.
An extraordinary scholar known for shaping our understanding of Indian history and inviting critical inquiry. At the time of independence, being 15 years old, we were conscious of nationalism and the coming of free India.
‘‘இந்திய வரலாற்றைப் பற்றிய நம்முடைய புரி தலை வடிவமைத்ததோடு, அது குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பத் தூண்டிய பெருமைக்குரிய ஒரு சிறந்த அறிஞர். நாடு சுதந்திரம் அடைந்தபோது, 15 வயதான நாங்களும் தேசியவாத உணர்வையும், சுதந்திர இந்தியாவின் பிறப்பையும் நன்கு உணர்ந்திருந்தோம்.’’
என்றைக்கும் பெரியார், தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே வந்ததில்லை!
இந்த அம்மையாருடைய அடுத்த வாக்கியம் தான் மிக முக்கியம்
‘‘But we were not aware of Hindutva working in the background.’’
‘‘அதற்குப் பின்னால் ஹிந்துத்துவா வருகிறது என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.’’
அதைப் புரிந்துகொண்டு முதல் மணி அடித்தவர் யார்?
தந்தை பெரியார்!
இது madeover மாதிரி, ஒரு எதிரி போனான் என்று உடனே சொன்னார்கள். அந்த இடத்தில், அண்ணா கூட கொஞ்சம் சறுக்கினார். அந்த இடத்தில் பெரியார்தான் உறுதியாக நின்று, வென்று காட்டியவர். என்றைக்கும் பெரியார், தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே வந்ததில்லை.
‘‘But we were not aware of Hindutva working in the background.’’
இதற்குப் பின்னால், ஹிந்துத்துவா இருக்கிறான்.
பெரியார் சொல்லிவிட்டார், ரொம்ப சுலபமாக ‘‘யோவ், இது வெள்ளைக்காரன் கைகளில் இருந்து அப்படியே மார்வாடி கைகளில் போயிருக்கிறது. Madeover இது’’ என்றார். பத்திரத்தை Madeover செய்து கொடுப்பார்கள் பாருங்கள், அதுபோன்று இது Madeover . வெள்ளைக்காரன் கைகளில் இருந்து வடநாட்டுக் கொள்ளைக்காரன் மார்வாடியிடம் போயிருக்கிறது.
நம்மை அழிக்கவேண்டும்; நம்முடைய கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று மிகப்பெரிய அளவுக்கு முயற்சிக்கிறார்கள்!
மூன்று பேர் எதிரி என்றால், அந்தக் காலத்தில் ஒரு பெரிய அளவுக்கு ஒரு காலண்டரே போட்டார்கள், நம்ம ஆளுங்க. பழைய காலண்டர் அது. அந்த தென்னாட்டை நோக்கி முதலில் வெள்ளைக்காரன் போவான்; அதற்கு அடுத்தது மார்வாரி. அதற்கடுத்துப் பார்ப்பனர் என்று உருவகப்படுத்தியிருப்பார்கள். ஆனால், நியாயமாக சொல்லவேண்டும் என்றால், ‘ரிவர்ஸ்’ செய்யவேண்டும். கடைசியாக வந்தவன் முதலில் போகிறான். முதலில் வந்தவன் கடைசியாகப் போக வேண்டியவன், இன்னும் இங்கே நின்று கொண்டு, நம்முடைய உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறேன்.
நம்மை அழிக்கவேண்டும்; நம்முடைய கலாச்சா ரத்தை ஒழிக்க வேண்டும் என்று மிகப்பெரிய அளவுக்கு முயற்சிக்கிறார்கள். பண்பாட்டுப் படையெடுப்பு; இப்பொழுது சமஸ்கிருத மொழி கட்டாயம் என்று கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்.
தந்தை பெரியார் அவர்கள், ‘திராவிடம்’ என்று சொன்னார். ‘‘நீங்கள் திராவிடம் என்று சொல்கிறீர்கள். பெரியார் மட்டும்தான் சொன்னாரா, நாங்களும் திராவிட இனம் என்று சொல்லவில்லையா?’’ என்று சிலர் கேட்கலாம்.
அதற்கும் சேர்த்தே பதில் சொல்கிறேன் நான்.
திராவிடன் என்று சொல்வது,
ரத்தப் பரிட்சை நடத்தி அல்ல!
ரத்தப் பரிட்சை நடத்தி அல்ல!
தந்தை பெரியார் சொன்னார், ‘‘நான் திராவிடன் என்று சொல்வது, ரத்தப் பரிட்சை நடத்தி அல்ல; ஆனால், ஹிட்லரும், அவர் வழி வந்த அமைப்புகளும் இன்றைக்கு ரத்தப் பரிசோதனை செய்கிறார்கள்.’’ என்றார்.
அவர்களே சொல்கிறார்கள், ‘‘ஏங்க இப்பொழுதான் எல்லோரும் கலந்துட்டாங்களே, இப்பொழுது இதுதான், அதுதான் என்று சொல்ல முடியுமா?’’ என்று.
அந்த ரத்தப் பரிட்சை அல்ல; பண்பாட்டுத் துறையில் இன்னும் நீ மாறி இருக்கிறாயா, இல்லையா? யாராவது ஒரு பார்ப்பனர், இதுவரையில எவ்வளவு படித்த பார்ப்பனராக இருந்தாலும் – பார்ப்பனர்கள் கூட பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள வருகிறார்கள். ஆனால், அவர்களைப் பொறுத்தவரையில், முழுக்க முழுக்க எதை அவர்கள் செய்கிறார்கள்? அவர்கள் வீட்டுத் திருமணத்தில், எங்கேயாவது நம்ம ஆட்களை அழைத்துச் செய்தி ருக்கிறார்களா?
பார்ப்பனர்களின் வீட்டுத் திருமணத்தில்
தமிழ் மொழியைப் பயன்படுத்துவார்களா?
தமிழ் மொழியைப் பயன்படுத்துவார்களா?
அவ்வளவு தூரம் போக வேண்டாம்; அவர்களின் திருமணத்தில், தமிழை பயன்படுத்துவார்களா? இன்னமும் பூசை என்பதை, பூஜையாக்கி, நம்முடைய பண்பாட்டில் கையை வைத்தார்கள்.
பூவும், நீரும் – தவத்திரு அடிகளார் சொல்லுவார் மிக அழகாக! நமக்கு ‘பூ செய்’ என்பது இருக்கிறதே, ‘பூவும், நீரும்’ என்பதுதான். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அதுதான் திராவிட நாகரிகம்! பின்னாளில் வந்துதான் கும்பிட ஆரம்பித்தார்கள். அதுவும், அவனுக்குப் பூ இருந்தது இயற்கையானது. ஆனால், தீயைக் கொண்டு வந்து நடுவில் போட்டு, விளக்கு எரிக்கணும், தீ எரிக்கணும் என்று கொண்டு வந்தது ஆரிய நாகரிகம்.
திராவிடர் – ஆரியம் என்பதற்கு
தந்தை பெரியாரின் விளக்கம்!
தந்தை பெரியாரின் விளக்கம்!
எனவேதான், அய்யா சொன்னார், ‘‘நான் எந்த அடிப்ப டையில் ஆரியம் – திராவிடம் என்று சொல்கிறேன் என்றால், கொள்கை அடிப்படையில் திராவிடம் என்று சொல்கிறோம். ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்றால், அது திராவிடம். ஜாதி இருக்க வேண்டும் என்றால், அது ஆரியம்.
அவ்வளவுதான்! இதற்குப் போய் அதுவா, இதுவா? இந்தக் கலரா, அந்தக் கலரா? என்பது இல்லை.
இன்றைக்குக் கூட ஒரு குழப்பம் பல பேருக்கு, ‘‘ஏங்க, ஒரு மொழியைப் படித்தால் என்ன?’’ என்று கேட்கிறார்கள்.
அம்பேத்கருக்கே, அந்த மிகப்பெரிய ஒரு குழப்பம் இருந்தது சமஸ்கிருதத்தை அவர் படித்ததினால். ஆனால், அந்த இடத்திலேயும் பெரியார் சரியாக இருந்தார். காரணம் என்னவென்றால், சமஸ்கிருதம் மொழியினால் அந்த பேதம் கூடாது என்று சொல்கிறோம் அல்லவா! சமஸ்கிருதம் பேதத்தையே தன்னுடைய மொழியின் அம்சமாகக் கொண்டது.
(தொடரும்)
