திருத்தணி சி.எஸ்.அய். உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தேர்வான 99 இருபால் மாணவர்கள், சென்னை பேராய அளவில் சி.எஸ்.அய். பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கு பெறுவதற்காக, சென்னை நேரு விளையாட்டரங்குக்கு வந்திருந்து போட்டிகளில் கலந்துகொண்டனர். மாணவர்களை அழைத்து வந்திருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாம்சன், போட்டிகள் முடிந்ததும், ’சென்னையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் ஒன்று இருக்கிறது. அதைக் கட்டாயம் பார்க்க வேண்டும்’ என்று விளையாட்டுத்துறை ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட 10 ஆசிரியர் பெருமக்களையும், மாணவர்களுடன் பெரியார் திடலுக்கு அழைத்து வந்து, பெரியார் திடலையும், பெரியார் நினைவிடத்தையும் சுற்றிக்காட்டி, மாணவர்களுக்கு பெரியாரின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுத்து, பின்னர் அழைத்துச் சென்றார். (சென்னை பெரியார் திடல், 26.08.2026)
பெரியார் திடலுக்கு பள்ளி மாணவர்கள் வருகை
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
