அரசு ஊழியர்களின் 3ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு! அரசாணை வெளியீடு

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 4- தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் 3ஆவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, 2 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் நிலையில், முழு ஊதியத்துடன் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2026-2027ஆம் ஆண்டுக்கான மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கையின்போது, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் 3ஆவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 3ஆவது குழந்தைக்கான 12 வார மகப்பேறு விடுப்பு 365 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்கள் இந்தச் சலுகையை பெறலாம். இந்த 365 நாட்களுக்கும் முழு ஊதியம் வழங்கப்படும்.

மேலும், மகப்பேறு விடுப்பை மகப்பேறுக்கு முந்தைய ஓய்வு காலம் முதல் மகப்பேறுக்குப் பிந்தைய உடல்நல மீட்பு காலம் வரை, சம்பந்தப்பட்ட பெண் ஊழியரின் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதிக்கு முன்பே 3ஆவது குழந்தைக்காக மகப்பேறு விடுப்பில் சென்று, அந்த விடுப்பை தொடர்ந்து அனுபவித்து வரும் பெண் அரசு ஊழியர்களுக்கும் இந்த புதிய சலுகை பொருந்தும். அவர்கள் மொத்தமாக 365 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *