இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.3 தமிழ்நாட்டின் நகர்ப்புற பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் உள்ளிட்டவற்றில் ரூ.35-க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரவையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் அறிவித்தார்.

பேரவையில் நேற்று (2.9.2026) பேசிய அமைச்சர் வெங்கடரமணன், ஈரான் போர் உள்ளிட்ட காரணங்களால் எரிபொருள் செலவு அதிகரித்தது, அண்டை மாநிலங்களில் காலநிலை தாக்கம் மற்றும் வெங்காயம் உற்பத்தி அதிகமாக இருக்கும் மகாராட்டிரம், மத்தியப் பிரதேச மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்துக் குறைந்தது. இதனால் தமிழ்நாட்டின் வெளிச் சந்தைகளில் வெங்காயம் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனையாகி வருகிறது.

எனவே, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு முதல் கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதான கூட்டுறவு பண்டக சாலைகள், அமுதம் அங்காடிகள், நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களைக் கொண்ட 8839 நியாயவிலைக் கடைகளில் செப்டம்பர் மூன்றாம் தேதி முதல் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 விலையில் விற்பனை செய்யப்படும். தேவைப்படின் கூடுதலாக வெங்காயம் வாங்கப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதன் மூலம் வெளிச் சந்தைகளில் வெங்காயம் விலை கணிசமாக குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *