திருவாரூர், செப். 3- திருவாரூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 01.09.2026 அன்று காலை 10 மணியளவில். திருவாரூர் தமிழர் தலைவர் அரங்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, தலைமை வகித்து உரையாற்றினார்.
மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் அ.அறிவுச்சுடர் கடவுள் மறுப்புக் கூறினார். நகர துணை தலைவர் சவு.சுரேஷ், அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்டக் காப்பாளர்கள் வீ.கோவிந்தராஜன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கரிகாலன், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கிப் பேசினார்.
மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் வீ.மோகன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, கருத்துரையாற்றினர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத், திருவாரூர் ஒன்றியத் தலைவர் க.கவுதமன், ஒன்றியச் செயலாளர் பாஸ்கரன், மாவட்டத் தொழிலாளர் அணி செயலாளர் இரா.நேரு, ஒன்றிய மகளிரணித் தலைவர் சரோஜா, மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.ரவிக் குமார், திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர் வே.அறிவழகன், , மருதம்மாறன், பன்னீர்செல்வம், ஆகியோர் கலந்துக்கொண்டு கருத்துகள் தெரிவித்தனர். மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் சி.தமிழவன், நன்றி கூறினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியம் சூரனூர் பெரியார் பெருந்தொண்டர் கணபதி வாழ்வினையர் நீலா, கொரடாச்சேரி ஒன்றியம் தக்களூர் வீரமணியின் வாழ்விணையர் மாலா ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் வீர வணக்கத்தையும். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரி விக்கிறது.
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் 148- ஆவது பிறந்த நாள் செப்டம்பர் 17 அன்று திருவாரூர் மாவட்டத்தில் மிக எழுச்சியோடு கொண்டாடிடும் வகையில் கழகத் தோழர்கள் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி, புத்தாடை உடுத்தி நண்பர்கள், உறவினர்கள், நாம் வசிக்கும் தெருவில் உள்ள பொதுமக்களுக்கும். வாழ்த்துகள் தெரிவித்து.
நமது நிறுவனத்தில் பணி புரியும் பணியாளர்கள் உள்ளிட் டோருக்கு இனிப்புகள் வழங்கி தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வது. கிளைக் கழகங்களில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றி ஒலிப் பெருக்கி வைத்து இயக்கக் கொள்கைப் பாடல்களை இசைக்க வைப்பதென முடிவு செய்யப்படுகிறது.
செப்டம்பர்-3 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் 148- ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு செப்டம்பர் மாத இறுதியில் திருவாரூரில் பெரியார் பட ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும் அதே போன்று நன்னிலம் கொரடாச்சேரி குடவாசல் ஆகிய ஒன்றியங்களிலும் பெரியார் படம் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்துதல். அக்டோபர் மாத இறுதியில் திருவாரூர் மாவட் டத்தில் பெரியார் கொள்கைக் குடும்பங்கள் சந்திப்பு விழா நடத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலை ஏட்டிற்கு சந்தா சேர்த்தல். விடுபட்ட சந்தாக்களை புதுப்பித்து அதிகமான சந்தா திருவாரூர் மாவட்டம் சார்பாக வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் 148. ஆவது பிறந்தநாள் மகிழ்வாக. திருவாரூர் நகரம் மற்றும் அனைத்து ஒன்றியங் களிலும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கீழ்க்கண்டப் பொறுப்பா ளர்கள் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவினை – ஒருங்கி ணைக்கும் தோழர்கள்.
திருவாரூர் ஒன்றியம்
மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ
திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தே.நர்மதா.
கொரடாச்சேரி ஒன்றியம்
மாவட்ட விவசாய அணிச் செயலாளர் க.வீரையன்,
மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் இரா.நேரு,
குடவாசல் ஒன்றியம்
மாவட்டக் காப்பாளர் வீர.கோவிந்தராஜ்,
மாவட்டத் துணைத் தலைவர் என்.ஜெயராமன்,
நன்னிலம் ஒன்றியம்
மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.கரிகாலன்.
பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன்
திருவாரூர் நகரம்
மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ.மோகன். மாவட்டத் தலைவர் எஸ்எஸ் எம்கே அருண்காந்தி,
திராவிடர் கழக குடவாசல் ஒன்றிய புதிய பொறுப்பாளர்கள்:
ஒன்றியத் தலைவர் க.அசோக் ராஜ், ஒன்றியச் செயலாளர் சி.அம்பேத்கர், ஒன்றிய துணைத் தலைவர் இராஜேந்திரன்.
