ஜப்பான் மாநாடு!

பெரியார் பன்னாட்டமைப்பு மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம், ஜப்பான் இணைந்து நடத்தும் பெரியார் சுயமரியாதை மனிதநேய மாநாடு எதிர்வரும் 2026 அக்டோபர் 11,12 (ஞாயிறு, திங்கள்) ஆகிய தேதிகளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் உலகெங்கும் இருக்கும் பெரியாரியலாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க இருக்கின்றனர். இரண்டு நாள் மாநாட்டிலும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார்கள்.

எனவே ஜப்பான் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் உடனடியாகத் தங்கள் பெயர்களைக் கீழ்க்காணும் ஒருங்கிணைப் பாளர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு:  94442 10999. 98424 87645

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *