மின் கட்டண உயர்வை எதிர்த்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

கடலூர், செப்.2- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பல்வேறு பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளது. ரூ.700 வரை செலுத்தியவர்களுக்கு தற்போது ரூ.26 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை கட்டணம் வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காட்டுமன்னார்கோவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல்றிந்து வந்த அதிகாரிகள், மின் அளவீடு செய்வதில் ஏற்பட்ட தவறு காரணமாக இருக்கலாம் என்றும், நேரில் மறுஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *